ரஜினி பிறந்தநாளை கொண்டாடுகிறதா கூகுள்?

8 Dec 2012

3 comments
வரும் 12-12-2012 அன்று நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் என்பது நிறைய பேருக்கு தெரியும். அதே நாளில் கூகுள் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒரு வேளை ரஜினி பிறந்த நாளை கூகுள் கொண்டாடுகிறதா?

Great Online Shopping Festival என்ற பெயரில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கூகுள் நிறுவனம் இணைய ஷாப்பிங் திருவிழா நடத்துகிறது. இதில் பல்வேறு வர்த்தக இணையதளங்கள் பங்கேற்கின்றன. அந்த ஒரு நாள் மட்டும் சிறப்பு தள்ளுபடிகளுடன் சில நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இலவச டோர் டெலிவரியும் செய்கின்றன.

திருவிழா நடைபெறும் இடம்: www.gosf.in/

உங்கள் பணத்தை செலவழிக்க தயாரா?

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

4 Dec 2012

8 comments

சொல்றதுக்கு வேற ஒண்ணுமில்ல... நான் ரொம்ப பிஸி...

குறிப்பு: இங்கு கற்கள் வீச தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளும், சில கிறுக்கல்களும்

14 Nov 2012

5 comments

வயதளவிலும், மனதளவிலும் குழந்தையாக இருக்கும் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!


குழந்தைகள் பற்றி என்ன எழுதுவதென்று தெரியவில்லை. என்னுடைய எண்ணங்களை வார்த்தையாக மாற்ற என்னால் முடியவில்லை. இனம் புரியாத அந்த உணர்வினை வெளிப்படுத்த நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வெளியீடாக வருகிறது.

அதனால் குழந்தைகள் பற்றி நான் ரசித்த பாடல் வரிகளில் சில:

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதர்கிந்த ஆராய்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக்க திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒரே ரத்தினக் கால் தோரனை
தோரனை

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்


யூட்யூபில் துப்பாக்கி படம்

12 Nov 2012

11 comments
யூட்யூபில் வெளிவந்த துப்பாக்கி படம் இங்கே உங்கள் பார்வைக்காக!



படம் நன்றாக உள்ளது. வீடியோ குவாலிட்டி தான் கொஞ்சம் சரியில்லை.

டிஸ்கி: ரொம்ப போர் அடித்த காரணத்தால் எதுவும் எழுதவில்லை, வீடியோவை மட்டும் பகிர்ந்துள்ளேன்.

முழுநிலவு: எதிர்பார்ப்பும், உண்மை நிலையும்

10 Nov 2012

19 comments
சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கும், ஆனால் அதன் உண்மை நிலையோ வேறு மாதிரி இருக்கும். அழகிய நிலவைப் பற்றிய நமது எதிர்பார்ப்பையும், உண்மை நிலையும் இந்த படம் அழகாக வெளிக்காட்டுகிறது.



நிலவு அழகாகத் தெரியும் பல நேரங்களில் நானும் இதனை படம் எடுக்க முயற்சிப்பேன். ஆனால் மேலே உள்ள படத்தைப் போல ஆகிவிடுகிறது.

ஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்

24 Oct 2012

5 comments

மீண்டும் ஒரு பயனுள்ள தொழில்நுட்ப பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! வர வர கூகுளின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவே இல்லை. ஏன் கூகுள் இப்படி நடந்துக் கொள்கிறது?

வாழைப்பழம்

மாம்பழம்

திராட்சை

ஸ்ட்ராபெர்ரி

ஆனால், ஆப்பிளுக்கு...?

ஆப்பிள்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு  சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

20 Oct 2012

10 comments
வார முதல் நாள் என்பதால் போரடிக்கிறதே என்று கூகுளில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக இது என் கண்ணில் பட்டது. இதைக் கண்டதும் எனக்கு கூகுள் மேல் செம கோபம். அது எப்படி கூகுள் பாரபட்சமாக நடக்கலாம்?

சந்தானத்திற்கு உண்டு, வடிவேலுக்கு உண்டு, ஏன் சாம் ஆண்டர்சனுக்கும் உண்டு... ஆனால் பவர் ஸ்டாருக்கு இல்லையா?

சந்தானம்

சாம் ஆண்டர்சன்

வடிவேலு

ஆனால், பவர் ஸ்டாருக்கு....????

பவர் ஸ்டார்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph

என்ன  கொடுமை சார் இது?

எனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்

15 Oct 2012

17 comments
ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அனிமேசன் படங்கள் தான். கிட்டத்தட்ட இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களும் எனக்கு பிடித்துள்ளது. அதில் சிலவற்றை மற்றும் இங்கு பதிவிடுகிறேன். விரைவில் இவற்றில் சில படங்களின் விமர்சனங்கள் வெளிவரலாம்.

  1. How to train your dragon?
  2. Toy Story 1,2,3
  3. Kungfu Panda 1,2
  4. Shrek 1,2,3
  5. Monsters Inc
  6. The Incredibles
  7. Tangled
  8. Rio
  9. Ice Age 1,2,3
  10. Madagascar 1,2,3
  11. Despicable Me
  12. Up
  13. Finding Nemo
  14. Chicken Little
  15. Chicken Run
  16. Antz
  17. Bolt
  18. Rango (படம் ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தது,பிறகு பிடித்திருந்தது)
  19. Puss in Boots
  20. Ratatouille
  21. Hotel Transylvania
  22. The Smurfs
  23. Megamind
  24. Monsters vs Aliens
  25. Astro Boy
  26. Planet 51
  27. Cloudy with a Chance of Meatballs
  28. TMNT (Teen Mutant Ninja Turtles)
  29. Meet the Robinsons
  30. The Wild  

ஆ... இப்பவே கை கட்டுதே... மீதி பட்டியலை அடுத்த பதிவுல பார்க்கலாம்.

உங்களுக்கு  எந்தெந்த அனிமேசன் படங்கள் பிடிக்கும்?

Hotel Transylvania (2012) - திரை விமர்சனம்

13 Oct 2012

11 comments

ஹாலிவுட்டில் ரசிகர்களை பயமுறுத்திய Dracula, Frankenstein, The Mummy, The Invisible Man, Werewolves போன்ற திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் Hotel Transylvania என்னும் அனிமேசன் படத்தில் இணைந்துள்ளன. தனித்தனியாக வெளிவந்து ரசிகர்களை திகிலில் உறையச் செய்த அந்த கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்தால்....?

Hotel Transylvania (2012) கதை சுருக்கம்:

ட்ராகுலாவின் செல்ல மகள் மேவிஸ் வெளி உலகிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் ட்ராகுலா அதனை மறுக்கிறது. மனிதர்களால் தனது மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது ட்ராகுலா. அதே நேரம் டிராகுலா தனது செல்ல மகளின் 118-ஆவது பிறந்தநாளுக்காக ஃப்ரான்கெஸ்டைன், மம்மி, இன்விசிபில் மேன், ஓநாய் போன்ற உலகில் உள்ள அனைத்து பேய்களையும் தான் புதிதாக கட்டியிருக்கும் மனிதர்கள் நுழைய முடியாத ஹோட்டல் ட்ரான்சில்வேனியாவிற்கு அழைக்கிறது. பேய்கள் எல்லாம் கும்மாளமடிக்கும் போது உள்ளே நுழைகிறான் ஒரு மனிதன், ஜோனாதன். அவனை மற்றவர்களிடமிருந்து இவன் மனிதன் என்பதை மறைக்க ஜோனாதன் ஃப்ரான்கெஸ்டைனின் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) என்று அறிமுகப்படுத்துகிறது ட்ராகுலா. இதற்கிடையில் ஜோனாதனுக்கும், மேவிசுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இதனை தடுக்க டிராகுலா படும் பாட்டையும், ஜோனாதனின் அட்டகாசங்களையும் காட்டுகிறது மீதிக் காட்சிகள்.

ரசிக்க வைத்த காட்சிகள்:


நிஜ  நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது.


குட்டி ஓநாய்களின் அட்டகாசங்கள் ரசிக்க வைத்தது. அதுவும் கடைக்குட்டி பெண் ஓநாய்க்கு மற்ற குட்டிகள் பயப்படுவது நன்றாக இருந்தது.

பொதுவாக  ஓட்டல்களில் நாம் தூங்கும் போது வெளியே கதவில் "Do not Disturb" என்று அட்டையை தொங்கவிடுவோம் அல்லவா? அதே போல இந்த ஹோட்டலில் அட்டைக்கு பதிலாக ஒவ்வொரு கதவுகளிலும் சூனியக்காரியின் (Witch) தலைகள் தொங்கவிடப் பட்டிருக்கும். அந்த தலைகள் "Do not Disturb" என்று சொல்லும். ஆனால் மேவிஸ் இருக்கும் அறையில் உள்ள தலை மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கும். (ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை)

ஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....

ஹிஹிஹிஹி...இன்னும் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது. அவசியம் படத்தை பாருங்கள். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

Hotel Transylvania Trailer:



ரேட்டிங்: 4.7/5 நட்சத்திரங்கள்

டிஸ்கி: எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க... எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், அவ்வளவு தான்! அதுவுமில்லாமல், எனக்கு படத்துல நடிச்சவங்க, டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்றேன்,

"அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்." - அப்துல் பாஸித்


வேட்டையாடு... விளையாடு... (பார்ட் 2)

10 Sept 2012

14 comments

டெர்ரர் கும்மி நண்பர்கள் இணைந்து கடந்த வருடம் "Hunt for Hint" என்ற மூளைக்கு சவால் விடும் வித்தியாசமான புதிர் போட்டியை நடத்தினர். அது இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது.

மொத்தம் 25 லெவல்கள் கொண்ட இந்த போட்டிக்கு பரிசுத் தொகையும் உண்டு.

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.

நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்.

ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....

விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்.

இந்த போட்டிக்கு காலவரையரை  இல்லை. முதலில் வருபவருக்கே முதல் பரிசு!

இரண்டாவதாக வருபவர்களுக்கு இரண்டாம் பரிசு!

மூன்றாவதாக.... சரி, சரி, அதற்கு பின் உங்களுக்கு தெரியும்.

சென்ற ஆண்டு நானும் கலந்துக் கொண்டேன். எப்படியோ, தத்தி, தாவி ஆறுதல் பரிசு ஐநூறு ரூபாய் பெற்றேன்.

இதை நீங்கள் விளையாடினால் Addict ஆகிவிடுவீர்கள். நான் விளையாடிய போது எனக்கிருந்த மனநிலை,


தற்போது இரண்டாம் ஆண்டாக இந்த போட்டியை நடத்துகின்றனர். வரும் புதன்கிழமை (12.09.2012) தொடங்குகிறது.

இது பற்றிய தகவல்களை பார்க்க: HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

இந்த  போட்டியில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,




சோதனைக்கு உள்ளாகும் நான்கு பதிவுகள்

28 Aug 2012

14 comments
ப்ளாக்கர் நண்பன் தளத்திற்காக "ரகசிய பதிவு" ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த பதிவிற்கான சோதனை எலிகளாக... ஐயையோ.. தப்பா சொல்லிட்டேன்.. சோதனை பதிவுகளாக மூன்று பிரபல பதிவர்களின் பதிவுகளையும், என்னுடைய பதிவு ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களின் Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

[இப்படி பதிவு போட்டு ஒரு பதிவரை கெட்டடிச்சிட்டார். இப்ப அவரு என்னடான்னா வீடியோ போஸ்ட் என்ற பேருல வரிசையா தொல்லை பண்ணிட்டு இருக்கார்]

நண்பர் ப்ளேட்பீடியா கார்த்திக் அவர்களின் அது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை!

 [சும்மா சொல்லக் கூடாது, மனுஷன் நல்லாவே அனுபவிச்சு எழுதிருக்கார்.]

அண்ணன் ரஹீம் கஸ்ஸாலி அவர்களின் டாப்-10 சிறந்த அரசியல் விருதுகள்- 2012

[அண்ணனுக்கு "அரசியல் வித்தகர்"  என்று பட்டத்தை நாம கொடுத்திடுவோமா?]

கடைசியாக என்னுடைய பதிவு சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்

[ஹிஹிஹிஹி... இதுக்கு நீங்களே கம்மென்ட் கொடுங்க...]

வலைச்சரத்தில் நான் பகிர்ந்தஹைக்கூ கவிதை [மாதிரி]

பிறக்கும்போதே
கவிஞன் ஆனேன்
அம்மா என்றதால்...!

டிஸ்கி: ரகசியம் விரைவில் வெளியிடப்படும்

தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்

26 Aug 2012

29 comments
இந்த தளத்தில் நான் சிறிது நேரங்களுக்கு முன்பு "தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் " என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். ஆனால் அதில்

"பதிவில் சந்திப்பில் எடுத்த புதிய படங்களை யாராவது விரைவாக பதிவேற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும்."

என்று  தான் சொல்லியிருந்தேன், புகைப்படங்களை பகிரவில்லை.

இது தவறு தான்! இப்படி தலைப்பிட்டு ஏமாற்றியதற்கு தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இனி இது போல செய்வதை தவிர்க்கிறேன்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், இதனை ஹிட்டுக்காக நான் எழுதவில்லை. இந்த தளத்தில் நான் எப்போதாவது தான் பதிவு போடுகிறேன். நகைச்சுவையாக தான் அவ்வாறு பதிவிட்டேன். ஆனாலும் இது தவறுதான். மன்னித்துவிடுங்கள்!

மூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்

4 Aug 2012

51 comments
யுத்தம் ஆரம்பம் - இது பதிவர்கள் பலர் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடர் கதையாகும். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பதிவர்கள் எழுதும் இந்த கதை முற்றிலும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதனை மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் திரைப்படக் கதையாக மட்டும் பார்க்கவும். இனி கதைக்கு செல்வோம்.....

பகுதி  1 - ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் - ஹாரி பாட்டர்

பகுதி 2 - துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - சீனு

மூன்றாம் யுத்தம் தொடர்கிறது...

#################################################################################

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று வந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க காரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.

காக்கிச்சட்டையினுள் அடங்க முடியாமல் உடல் திமிறிக் கொண்டிருக்க சிங்கம் போல நடந்து வந்தார் இன்ஸ்பெக்டர் சூர்யா. நடந்து வரும் போதே தன்  கையில் இருந்த கருப்பு நிறக் கண்ணாடியை கண்களில் பொருத்த, பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்தனர்.

"சார்! நீங்க தான் இந்த கேஸை விசாரிக்கப் போறதா கேள்விப்பட்டோம். குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீன்களா?"

"இதுல எதிர்கட்சியோட சதி இருக்குமா?"

"சொந்தக் கட்சியிலேயே சில பேர் இதுல சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்களே? அது உண்மையா சார்?"

"பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி இது நடந்திருக்கிறது என்றால், காவல்துறையில உள்ளவங்களுக்கும் இதுல பங்கு இருக்கா சார்?"

நிருபர்கள் ஒவ்வொருவரும் சரமாரியாக கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க, கடைசிக் கேள்வியால் சூர்யா டென்ஷன் ஆனார்.

"நான் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. விசாரணைக்கு பின்னால் தான் உண்மை என்னவென்று தெரியும். அதுவரைக்கும் உங்க யூகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. சாரி!" சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே சென்றார்.



அறையில் டி.ஜி.பி ராஜேந்திரன் அமர்ந்திருக்க அவருக்கு சூர்யா சல்யூட் அடித்தார்.

"வாங்க மிஸ்டர் சூர்யா! உங்களுக்காகத் தான் காத்திட்டு இருக்கேன். உட்காருங்க!"

"தேங்க்யூ சார்!" என்று சொல்லி சூர்யா அமர்ந்தார்.

"முதல்வரோட நன்றி அறிவிப்பு மாநாட்டுல நடந்தை கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்"

"ஆமா சார்! எனக்கே அதிர்ச்சியா இருந்தது"

"உங்களால தான் இந்த கேஸை சீக்கிரம் முடிக்க முடியும்னு எனக்கு தோணுச்சு. அதனால தான் நான் உங்களை கூப்பிட்டேன். இந்த ஃபைலில் நிகழ்ச்சி நடந்தப்ப எடுத்த போட்டோ, வீடியோக்கள், ஃபாரன்சிக் ரிப்போர்ட் எல்லாம் இருக்கு. இதுல ஏதாவது துப்பு கிடைக்குமான்னு பாருங்க"

"ஓகே சார்!"

"சூர்யா! உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் சொல்றேன். இது ஒரு சென்சேசனல் கேஸ். சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாருங்க"

"புரியுது சார்! ஐ வில் டு மை பெஸ்ட்"

"அப்புறம் உங்களுக்கு கணேஷ்-வசந்தை தெரியும் தானே?"

"கணேஷ் வசந்த் அந்த லாயர் கம் டிடெக்டிவ்ஸ் தானே சார்?"

"ஆமா அவங்க தான். முதல்வர் தனிப்பட்ட முறையில அவங்களை விசாரிக்க சொல்லியிருக்கார். தேவைப்பட்டால் அவங்களோட கோ-ஆப்பரேட் பண்ணுங்க"

"முதல்வர் ஏன் சார் அவங்களை கூப்பிடனும்?"

"ஒரு வேளை நம்ம டிபார்ட்மென்ட் மேல நம்பிக்கை இல்லாமல் கூட இருக்கலாம்."

"சரி சார்! இப்பவே நான் என் விசாரணையை தொடங்குறேன். அப்ப நான் கெளம்புறேன் சார்!"

"ஆல் தி பெஸ்ட் சூர்யா!"

"தேங்க்யூ சார்!" சொல்லிக் கொண்டு சூர்யா டி.ஜி.பியிடமிருந்து விடைப்பெற்றார்.

##################################################################################

சென்னை விமான நிலையம் எப்போதும் போல பரப்பரப்புடன் காட்சி அளித்தது.

"கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்களை விட்டுடுறாங்க. வெளிநாட்டுல வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்து நகை வாங்கிட்டு வரும் நம்மகிட்ட காசு புடுங்குறாங்க. எல்லாம் நம்ம தலையெழுத்து!" சுங்கத் துறையை திட்டிக் கொண்டே பயணிகள் செல்ல, Arrival பகுதியில் அஜித்தும், விஜயும் காத்திருந்தனர். அவர்கள் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.



சிறிது  நேரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டு கமல் வந்தார். உடனே இருவரும் சென்று வரவேற்றனர். இருவரையும் கட்டியணைத்தார் கமல்.

"எப்படிப்பா இருக்கீங்க?"

"எப்படி அங்கிள் இருக்கீங்க?" அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"நான் நல்லா இருக்கேன்மா! அப்பா எப்படி இருக்கார் விஜய்?"

"இப்ப தேவலாம் அங்கிள். கையில தான் லேசான அடி. வீட்டில் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கார்"

அஜித் ட்ராலியை தள்ளிச் செல்ல மூவரும் காரில் ஏறினர்.

"நான் அப்பவே ரஜினிகிட்ட சொன்னேன். அரசியல் வேண்டாம், உனக்கு சரிப்பட்டு வராதுன்னு. ஆனா அவன் கேட்கலை. இப்ப பாருங்க, பதவி ஏற்று ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு" கமல் சொன்னார்.

"இல்லை அங்கிள்! இதுல அரசியல் காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். வேற ஏதோ நடந்துட்டு இருக்கு. விபரீதமா ஏதோ நடக்க போகுதுன்னு எனக்கு தோணுது"

"எதை வைத்து சொல்ற விஜய்?"

"ஆமாம்பா! எனக்கும் அதான் தோணுது. எங்களுக்கு வந்த எஸ்.எம்.எசை பாருங்க" என்று சொல்லிக் கொண்டே அஜித் தன்னிடமிருந்த மொபைலை கமலிடம் காட்ட, கமலின் முகம் மாறியது.

##################################################################################

இரவு பத்து மணி. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் சூர்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"என்னங்க! இன்னொரு தோசை ஊத்தவா?"

"எனக்கு போதும்மா! நீ சாப்பிடு!" சூர்யா பதில்சொல்லும்போதே மேஜையில் இருந்த அவரின் மொபைல் ஒலித்தது.

"ஹலோ! யார் பேசுறது?"

"........................"

"ஆமா! சூர்யா தான் பேசுறேன்"

"........................"

"ம்ம்ம்ம்"

"........................."

"எந்த இடத்துல நடந்தது?"

"........................."

"சரி! இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வர்றேன்" போனை கட் செய்து, மனைவியிடம் சொல்லிவிட்டு அவசரமாக காரில் கிளம்பினார்.

பெசன்ட் நகர் பீச் அருகே ஒரு வீடு மட்டும் தனியாய் தெரிந்தது. வீட்டின் வடிவமைப்பும், அலங்கார விளக்குகளும் வெளிநாட்டு தரத்தில் இருந்தது.

காவல்துறையினர்  சூழ்ந்திருக்க, சூர்யாவின் கார் வந்து நின்றது.

"வாங்க சார்!" சப் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன் வரவேற்க இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்க அதனை ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

"உங்களை கூப்பிட்டதற்கு இது தான் சார் காரணம்" என்று சுவற்றை காட்டினார் லிவிங்ஸ்டன். அங்கே ரத்தத்தால் ஆங்கில வாசகம் எழுதப்பட்டிருந்தது.

WAR BEGINS


##################################################################################

யுத்தம் தொடரும் இடம் - சின்னமலை - தல போல வருமா


அதனை தொடர்ந்து யுத்தம் செய்யவிருப்பவர்கள்:

பகுதி 5 - SCENECREATOR -யாவரும் நலம்
பகுதி 6 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்
பகுதி 7 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்
பகுதி 8- ராஜா - என் ராஜ பாட்டை
பகுதி 9 - JZ - JZ சினிமா
பகுதி 10 - ராஜ் -சினிமா சினிமா
பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள்
பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக்
பகுதி 13 - அருண் - அவிழ்மடல்
பகுதி 14 - மதுமதி - தூரிகையின் தூறல்
பகுதி 15 - சென்னை பித்தன் - நான் பேச நினைப்பதெல்லாம்
பகுதி 16 - வெங்கட் சீனிவாசன் - கையளவு மண்
பகுதி 17 - பாரதி - சிகரம்
பகுதி 18 - நீங்களாகவும் இருக்கலாம். அது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

கூகுளில் பேய் - நடந்தது என்ன?

31 Jul 2012

10 comments
நேற்று கூகுளில் பேய் பற்றிய பதிவு போட்டிருந்தேன் அல்லவா? அப்பப்பா.... பேயை பார்க்க என்னா கூட்டம்? என்னா கூட்டம்? சரி, நேத்து பார்த்தது பேயா? இல்லை பொய்யா? என்று பார்ப்போம்.

Google Street View:

Street View என்பது கூகுள் மேப்பில் உள்ள ஒரு வசதியாகும். இதன் மூலம் உலகில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் பார்ப்பது போன்று பார்க்கலாம். இவைகள் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.

Google Street view cars and Google Trike
இந்த புகைப்படங்கள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன், பிரத்யேகமான கேமராக்களுடன் கூடிய Google Street View Car, Google Trike ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். Google Trike என்பது சைக்கிள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குற்றம் - நடந்தது என்ன?


மேலே உள்ளது தான் நீங்கள் பார்த்து பயந்த(ஹிஹிஹி) பேய் அல்லது பொய் படமாகும். புகைப்படம் எடுக்கும் போது கேமராவில் ஏதோ இருந்திருக்கலாம். அதனை மறைத்திருக்கிறார்கள். மற்றபடி பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கீழுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும்.



முக்கிய அறிவிப்பு:

இதனால் சகலமானோருக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்களைக் கொல்லப் போறோம்! பதிவில் சொன்னது போல, பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடரின் மூன்றாம் பகுதியை இறைவன் நாடினால் விரைவில் இந்த தளத்தில் எழுத போகிறேன்.

கூகுளில் பேயை பார்க்கலாம் வாங்க

30 Jul 2012

41 comments

கூகுள் மேப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் பேய் படம் இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வந்தது. வாருங்கள், நாமும் அந்த பேயை (???) பார்க்கலாம்.

1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அங்கே பெட்டியில்  47.110579,9.227568 என்று கொடுத்து என்டர் தட்டுங்கள்.

3. பிறகு பச்சை நிற கீழ்நோக்கும் அம்புக்குறியை (Down Arrow) கிளிக் செய்து, Street view என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. சுவிட்சர்லாந்தில் உள்ள சாலை தெரியும். அந்த படத்தின் மேலே இடது ஓரமாய் வட்ட வடிவில் Navigation வசதி இருக்கும். அதில் மேலே செல்வதற்கு இரண்டுமுறை அழுத்துங்கள். இடது புறம் செல்வதற்கு இரண்டு முறை அழுத்துங்கள்.

5. அதில் தெரியும் பேயை (??) பார்த்து பயப்படுங்கள் அல்லது சிரியுங்கள் அல்லது என் மேல் கோபப்படுங்கள்.

6. கீழே இருக்கும் ஓட்டுப் பட்டைகளில் ஓட்டுக்களை போடுங்கள்.

7. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

9. வேறொரு நல்ல பிளாக்கிற்கு சென்று விடுங்கள்.

10. மீண்டும் நான் பதிவிட்டப் பின் இங்கே வாருங்கள்.

11. அந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

12. Step ஆறிலிருந்து திரும்பவும் செய்யுங்கள்.

டிஸ்கி: பேயை (???) பார்த்த பிறகுகீழுள்ள டிஸ்கியை படியுங்கள்.

துணை டிஸ்கி: பேய் இருப்பதாக நான் நம்புவதில்லை. இது பேயும் அல்ல. இதன் உண்மை காரணத்தை நாளை சொல்கிறேன்.

கூகுளில் பேய் - நடந்தது என்ன?

உங்களைக் கொல்லப் போறோம்!

28 Jul 2012

15 comments

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...

ஓ.. இது தொலைக்காட்சி இல்லைல... சரி, வேற மாதிரி சொல்லலாம்...

எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக...

ச்சே... இது நால்லா இல்லையே! வேற எப்படி சொல்றது?

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக....

பில்டப் ஓவரா இருக்குதோ?

சரி நேரடியா விசயத்திற்கு வரேன்..

Ideas of Harry Potter தளத்தின் ஓனர் ஹாரிபாட்டர் (டப்புடு இன் தமிழ்) அவர்கள் தொடர்-கதை ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அவர் எழுதியிருப்பது தொடர்கதை அல்ல, தொடர்-கதை.

அதாவது பதிவர்கள் அதிகம் பேர் இணைந்து எழுதும் தொடர்+கதை.


ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் என்று கதையை ஹாரிபாட்டர் அவர்கள் தொடங்கியுள்ளார். அதனை வேறொரு பதிவர் தொடர்வார். அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு... சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க.. இப்ப புரியுதா? இல்லைன்னா, இந்த பத்தியை திரும்பவும் படிங்க.

இப்படி  ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மெகா சீரியல் மாதிரி எழுதி உங்களை கொல்ல போறோம். இதில் மகிழ்ச்சியான, உற்சாகமான, பிரமிப்பான, பெருமைக்குரிய... (இப்படி இன்னும் நெறையா இருக்கு, சட்டுன்னு நினைவுக்கு வரல) செய்தி என்னவென்றால், மூன்றாவதாக உங்களைக் கொல்ல போவது "ப்ளாக்கர் நண்பன்" ஆகிய நான் தானுங்கோ!

பயப்படாதீங்க, ப்ளாக்கர் நண்பன் தளத்துல எழுத மாட்டேன். இதே ப்ளாக்கில் தான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடம்பெறப் போகிறது.

நீங்களும் கதை எழுதிக் கொல்லலாம். அதற்கான விபரங்கள்,

எழுதுபவர்களுக்கான விபரங்கள் / அறிவுறுத்தல்கள்

1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.

2. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)

3. கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள் வைக்கலாம்..

4. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்..

மேலும் விபரங்களுக்கு உலக வரலாற்றில் முதல் முறையாக.... பதிவை  பாருங்கள்.

இதில் என்னைப் போன்று கதை எழுத தெரியாதவர்களும் கலந்துக் கொள்கிறார்கள், சிறப்பான கதைகளை எழுதிவரும் பதிவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

 முதல் கதையினைப் படித்து உங்கள் விருப்பத்தினை ஹாரிபாட்டர் தளத்தில் தெரிவிக்கலாம்.

டிஸ்கி: உங்களைக் கொல்லப் போறோம் என்று சொன்னதன் அர்த்தம், உங்களை ரசிக்க வைத்து, சிரிக்க வைத்து உங்கள் சோகங்களை (கொஞ்ச நேரமாவது) கொல்லப் போகிறோம் என்று அர்த்தமாகும்.

பேஸ்புக் பார்த்ததால் தோள்பட்டையில் அடி

10 Jul 2012

3 comments
அமெரிக்காவின் சான் டீகோவில் (San Diego) கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்பால் (Baseball) போட்டி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் தனது மொபைலில் பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

பேஸ்புக் மொபைலில் Check-In என்றொரு வசதி இருக்கிறது. அதன் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாம். அந்த ரசிகரும் தாம் பேஸ்பால் போட்டியை காண வந்திருப்பதாக சொல்வதற்கு check-In வசதியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த பந்து அவரின் தோள்பட்டையை பதம் பார்த்தது. கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.



ஆனாலும் அவருக்கு செம சிரிப்பு. பின்னே இருக்காதா? அடி வாங்கி பிரபலம் ஆகிவிட்டாரே!

இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களை பிறகு பார்க்கலாம்.

எங்க வீட்டில் பணம் நிறைய இருக்கு

29 May 2012

8 comments

பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது நம் வீடுகளில், நாம் செல்லும் இடங்களில் என்று எங்கேயாவது எதையாவது பார்த்தால் உடனே தனது மொபைலை எடுத்து போட்டோ பிடித்து பேஸ்புக்கில் பகிர்வது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல! ஆனால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதை அறிவீர்களா?

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது பெண் தனது பாட்டி வீட்டில் தங்கி வருகிறார். கடந்த 24-ஆம் தேதி அவர் பாட்டியின் சேமிப்பு பணத்தை எண்ணுவதற்கு உதவி செய்துள்ளார். நிறைய பணத்தை பார்த்ததும் அந்த பெண் உடனே அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

நிற்க...!  (அல்லது உட்கார்ந்துக் கொண்டே படிக்க...!)

பேஸ்புக்  என்பது பாதுகாப்பானது அல்லது தனிப்பட்டது (Private) என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு பேஸ்புக் பற்றி தெரியவில்லை என்று அர்த்தம். உங்களை உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கை பயன்படுத்தும் கோடிக்கணக்கான கண்கள் கண்காணிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (நாம் என்ன அவ்வளவு பிரபலமா? என கேட்காதீர்கள். ஒரு உவமைக்காக சொன்னேன்)


சம்பவம்  தொடர்கிறது....

பேஸ்புக்கில் அந்த பெண் அதிகமான பணத்தின் புகைப்படத்தைப் போட்டதும் அதனை பார்த்தவர்களில் இரு திருடர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு முகமூடி அணிந்துக் கொண்டு சென்றுள்ளனர் (ஆனால் பணம் இருப்பது பாட்டி வீட்டில்). அங்கிருந்த பெண்ணின் தாயாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர் . அந்த பெண் இங்கு தங்குவதில்லை என்று சொல்லியுள்ளார். வீடு முழுதும் தேடிப் பார்த்தபின்  அந்த வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தையும், சில பொருட்களையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். பிறகு  இது பற்றி போலீசில் புகார் செய்துள்ளார் அந்த பெண்ணின் தாயார்.

சம்பவம் முடிந்தது....

பாதுகாப்பு வழிகள்:
  • உங்கள் புகைப்படத்தை பகிர்வதை தவிர்க்க முயற்சியுங்கள்.
  • உங்கள் வீட்டு முகவரி, மொபைல் எண் போன்றவற்றை பகிராதீர்கள்.
  • உங்கள் இருப்பிடத்தைப் புகைப்படம் எடுத்து பகிராதீர்கள்.
  • உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்ப்பதை தவிருங்கள்.
அட்வைஸ்  முடிந்தது...! இனி பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பது உங்கள் கையில்...!

இந்தசம்பவம் குறித்து ஆஸ்திரேலியா போலீசின் அறிக்கை: http://goo.gl/ZR2Ql

பேஸ்புக் நிறுவனரின் எளிமையான திருமணம்

20 May 2012

8 comments
Credit: Facebook.com

சமூக வலையமைப்பு தளங்களில் முன்னிலையில் இருந்துவரும் பேஸ்புக் தளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). நேற்று பங்குசந்தையில் பேஸ்புக்  நுழைந்ததன் மூலம் உலக பணக்கார பட்டியலில் 23-ஆம் இடத்திற்கு வந்துள்ளார். பெரும் பணக்காரராக இருக்கும் மார்க்கின் திருமணம் நூற்றுக்கும் குறைவானவர்களின் முன்னிலையில் எளிமையாக நடைப்பெற்றுள்ளது.

தான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துள்ளார் மார்க்.

டிஸ்கி: நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தகவலை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பகிராமல் இங்கு பகிர்கிறேன்.