Hotel Transylvania (2012) - திரை விமர்சனம்

13 Oct 2012


ஹாலிவுட்டில் ரசிகர்களை பயமுறுத்திய Dracula, Frankenstein, The Mummy, The Invisible Man, Werewolves போன்ற திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் Hotel Transylvania என்னும் அனிமேசன் படத்தில் இணைந்துள்ளன. தனித்தனியாக வெளிவந்து ரசிகர்களை திகிலில் உறையச் செய்த அந்த கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்தால்....?

Hotel Transylvania (2012) கதை சுருக்கம்:

ட்ராகுலாவின் செல்ல மகள் மேவிஸ் வெளி உலகிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் ட்ராகுலா அதனை மறுக்கிறது. மனிதர்களால் தனது மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது ட்ராகுலா. அதே நேரம் டிராகுலா தனது செல்ல மகளின் 118-ஆவது பிறந்தநாளுக்காக ஃப்ரான்கெஸ்டைன், மம்மி, இன்விசிபில் மேன், ஓநாய் போன்ற உலகில் உள்ள அனைத்து பேய்களையும் தான் புதிதாக கட்டியிருக்கும் மனிதர்கள் நுழைய முடியாத ஹோட்டல் ட்ரான்சில்வேனியாவிற்கு அழைக்கிறது. பேய்கள் எல்லாம் கும்மாளமடிக்கும் போது உள்ளே நுழைகிறான் ஒரு மனிதன், ஜோனாதன். அவனை மற்றவர்களிடமிருந்து இவன் மனிதன் என்பதை மறைக்க ஜோனாதன் ஃப்ரான்கெஸ்டைனின் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) என்று அறிமுகப்படுத்துகிறது ட்ராகுலா. இதற்கிடையில் ஜோனாதனுக்கும், மேவிசுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இதனை தடுக்க டிராகுலா படும் பாட்டையும், ஜோனாதனின் அட்டகாசங்களையும் காட்டுகிறது மீதிக் காட்சிகள்.

ரசிக்க வைத்த காட்சிகள்:


நிஜ  நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது.


குட்டி ஓநாய்களின் அட்டகாசங்கள் ரசிக்க வைத்தது. அதுவும் கடைக்குட்டி பெண் ஓநாய்க்கு மற்ற குட்டிகள் பயப்படுவது நன்றாக இருந்தது.

பொதுவாக  ஓட்டல்களில் நாம் தூங்கும் போது வெளியே கதவில் "Do not Disturb" என்று அட்டையை தொங்கவிடுவோம் அல்லவா? அதே போல இந்த ஹோட்டலில் அட்டைக்கு பதிலாக ஒவ்வொரு கதவுகளிலும் சூனியக்காரியின் (Witch) தலைகள் தொங்கவிடப் பட்டிருக்கும். அந்த தலைகள் "Do not Disturb" என்று சொல்லும். ஆனால் மேவிஸ் இருக்கும் அறையில் உள்ள தலை மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கும். (ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை)

ஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....

ஹிஹிஹிஹி...இன்னும் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது. அவசியம் படத்தை பாருங்கள். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

Hotel Transylvania Trailer:ரேட்டிங்: 4.7/5 நட்சத்திரங்கள்

டிஸ்கி: எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க... எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், அவ்வளவு தான்! அதுவுமில்லாமல், எனக்கு படத்துல நடிச்சவங்க, டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்றேன்,

"அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்." - அப்துல் பாஸித்


11 comments:

Prabu Krishna said...

அடுத்தடுத்து அதிரடி விமர்சனங்களை எழுதுங்கள் :-)))

வரலாற்று சுவடுகள் said...

எனிமா விமர்சனம் அருமை..ஆங்..ச்சே...சினிமா விமர்சனம் அருமை!

மனப்பாடம் செய்யும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறேன், மனப்பாடம் செய்துவிட்டு மீண்டும் வருகிறேன்! புரிதலுக்கு நன்றி!

வரலாற்று சுவடுகள் said...

>>>>எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க<<<

நன்றாகவே தாங்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறீர்கள் பிரதர் அதற்க்கு கீழ்க்கண்ட வரிகளே சாட்சி !

////நிஜ நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது///

//அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்//

Keep rocking!

வரலாற்று சுவடுகள் said...

>>>ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை<<<

அப்பாடா நமக்கும் ஒரு ஆள் கூட்டுக்கு இருக்கு..

#அந்நிய மொழியை எதிர்த்து தண்டவாளத்தில் தலை வைப்போர் சங்கம்!

வரலாற்று சுவடுகள் said...

Thanks for keeping my blog link in the sidebar widget where is duly Nanbenda! :)

Thanks again! :)

Prem Kumar.s said...

அட விமர்சனம் கலக்கலுங்கோ

ஹாரி பாட்டர் said...

// ஒன்று விட்ட சகோதரன்//
ஒன்று விட்டாலும் சகோதரன் தானுங்கோ.. cousin இல்லையே? ஒரு வேளை மூஞ்சுல ஒன்னு விட்ட சகோதரனோ? ஒன்று விட்டாலும் சகோதரன் தானுங்கோ.. cousin இல்லையே? ஒரு வேளை மூஞ்சுல ஒன்னு விட்ட சகோதரனோ?

ஹாரி பாட்டர் said...

//ஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....//

யாரு அப்துல் ஹாரிஸ் மியுசிக்கா?

ஹாரி பாட்டர் said...

பயபுள்ள பரீட்சைக்கு ஆங்கில படத்தில இருந்தெல்லாம் நோட்ஸ் எடுக்குது..

ஹாலிவுட்ரசிகன் said...

அட ... டெக்னிக்கல் மட்டும் தான் எழுதுவீங்கன்னு பார்த்தா, விமர்சனத்திலயும் கலக்குறிங்களே “பாஸ்”(இத்)? தொடர்ந்து விமர்சனம் எழுதுங்க.

ரொம்ப நாளாச்சு கடைசியா அனிமேஷன் பார்த்து..நேத்து தான் ice age 4, madagascar டவுன்லோட் பண்ணினேன்.

இதோட ஒரிஜினல் ப்ரிண்ட் வர இன்னும் 2-3 மாசமாகுமே??

Karthik Somalinga said...

அட! வாழ்த்துக்கள் - ஒரு மாசம் இந்தப் பக்கம் வரலேன்னா என்னென்னவோ அதிசயம் எல்லாம் நடக்குது?! :D