டீ போடுவது எப்படி?

27 Dec 2013

17 comments

பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு "பிரபல" "பிரபல" பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல்களில் ஒன்றை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை டீ குடித்த சில நிமிடங்களில் எழுதத் துவங்குகிறேன்.

டீ போடுவது எப்படி?

சுவையான டீயை மிக எளிதாக நீங்களே செய்வதற்கான வழிமுறைகள்.

பொதுவாக டீ போடுவதில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை, வேறு யாராவது செய்திருந்த டீயை வாங்கி கீழே போடுவது.

ஆனால் நாம் பார்க்க விருப்பது இரண்டாவது வகை.

தேவையான பொருட்கள்:

1. டீ தூள்
2. பால் அல்லது பால் பவுடர்.
3. சீனி

செய்முறை:
  1. பாத்திரத்தில் தேவையான அளவு பால் அல்லது தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.
  2. லேசாக தண்ணீர்/பால் கொதிக்கும் போது தேவையான அளவு டீ தூள் போடவும்.
  3. உங்களுக்கு லைட் டீ வேண்டுமா? ஸ்ட்ராங் டீ வேண்டுமா? என்பதைப் பொறுத்து கொதிக்க விட வேண்டும்.
  4. நல்ல கொதி வந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
  5. கப்பில் தேவையான அளவு சீனிபோட்டு வைத்துக் கொள்ளவும்.
  6. பால் இல்லாமல் தண்ணீரில் செய்தால் பால் பவுடர் தேவையான அளவு கப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
  7. சட்டியிலிருக்கும் டீயை வடித்தட்டு பயன்படுத்தி கப்பில் ஊற்றவும்.
  8. பிறகு சீனி, பால் பவுடர் கரைவதற்காக டீயை ஆற்றிக் கொள்ளவும்.
அவ்வளவு தான்! சுவையான அல்லது சுமாரான டீ தயார்! இந்த டீயை 5 நிமிடங்களிலேயே செய்து குடிக்கலாம். முதல் முறை டீயை நீங்களே செய்து குடித்தால் நட்சத்திர ஓட்டலில் குடிப்பது போலவே உணரலாம்.

தேடு இயந்திரத்திற்கான மேலதிகத் தகவல்கள்:

சமையல்:டீ போடுவது எப்படி?

சமையல் கலைஞர்:

சமையல் நாள்:

சமையல் குறிப்பு:டீ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுவையான தேநீரின் செய்முறை.

சுய மதிப்பாய்வு: 4.5 நட்சத்திரங்கள், 1509 பார்வைகள்

தயாராகும் நேரம்:

சமையல் நேரம்:

மொத்த நேரம்: