கூகுளில் பேய் - நடந்தது என்ன?

31 Jul 2012

11 comments
நேற்று கூகுளில் பேய் பற்றிய பதிவு போட்டிருந்தேன் அல்லவா? அப்பப்பா.... பேயை பார்க்க என்னா கூட்டம்? என்னா கூட்டம்? சரி, நேத்து பார்த்தது பேயா? இல்லை பொய்யா? என்று பார்ப்போம்.

Google Street View:

Street View என்பது கூகுள் மேப்பில் உள்ள ஒரு வசதியாகும். இதன் மூலம் உலகில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் பார்ப்பது போன்று பார்க்கலாம். இவைகள் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.

Google Street view cars and Google Trike
இந்த புகைப்படங்கள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன், பிரத்யேகமான கேமராக்களுடன் கூடிய Google Street View Car, Google Trike ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். Google Trike என்பது சைக்கிள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குற்றம் - நடந்தது என்ன?


மேலே உள்ளது தான் நீங்கள் பார்த்து பயந்த(ஹிஹிஹி) பேய் அல்லது பொய் படமாகும். புகைப்படம் எடுக்கும் போது கேமராவில் ஏதோ இருந்திருக்கலாம். அதனை மறைத்திருக்கிறார்கள். மற்றபடி பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கீழுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும்.முக்கிய அறிவிப்பு:

இதனால் சகலமானோருக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்களைக் கொல்லப் போறோம்! பதிவில் சொன்னது போல, பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடரின் மூன்றாம் பகுதியை இறைவன் நாடினால் விரைவில் இந்த தளத்தில் எழுத போகிறேன்.

கூகுளில் பேயை பார்க்கலாம் வாங்க

30 Jul 2012

41 comments

கூகுள் மேப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் பேய் படம் இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வந்தது. வாருங்கள், நாமும் அந்த பேயை (???) பார்க்கலாம்.

1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அங்கே பெட்டியில்  47.110579,9.227568 என்று கொடுத்து என்டர் தட்டுங்கள்.

3. பிறகு பச்சை நிற கீழ்நோக்கும் அம்புக்குறியை (Down Arrow) கிளிக் செய்து, Street view என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. சுவிட்சர்லாந்தில் உள்ள சாலை தெரியும். அந்த படத்தின் மேலே இடது ஓரமாய் வட்ட வடிவில் Navigation வசதி இருக்கும். அதில் மேலே செல்வதற்கு இரண்டுமுறை அழுத்துங்கள். இடது புறம் செல்வதற்கு இரண்டு முறை அழுத்துங்கள்.

5. அதில் தெரியும் பேயை (??) பார்த்து பயப்படுங்கள் அல்லது சிரியுங்கள் அல்லது என் மேல் கோபப்படுங்கள்.

6. கீழே இருக்கும் ஓட்டுப் பட்டைகளில் ஓட்டுக்களை போடுங்கள்.

7. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

9. வேறொரு நல்ல பிளாக்கிற்கு சென்று விடுங்கள்.

10. மீண்டும் நான் பதிவிட்டப் பின் இங்கே வாருங்கள்.

11. அந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

12. Step ஆறிலிருந்து திரும்பவும் செய்யுங்கள்.

டிஸ்கி: பேயை (???) பார்த்த பிறகுகீழுள்ள டிஸ்கியை படியுங்கள்.

துணை டிஸ்கி: பேய் இருப்பதாக நான் நம்புவதில்லை. இது பேயும் அல்ல. இதன் உண்மை காரணத்தை நாளை சொல்கிறேன்.

கூகுளில் பேய் - நடந்தது என்ன?

உங்களைக் கொல்லப் போறோம்!

28 Jul 2012

15 comments

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...

ஓ.. இது தொலைக்காட்சி இல்லைல... சரி, வேற மாதிரி சொல்லலாம்...

எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக...

ச்சே... இது நால்லா இல்லையே! வேற எப்படி சொல்றது?

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக....

பில்டப் ஓவரா இருக்குதோ?

சரி நேரடியா விசயத்திற்கு வரேன்..

Ideas of Harry Potter தளத்தின் ஓனர் ஹாரிபாட்டர் (டப்புடு இன் தமிழ்) அவர்கள் தொடர்-கதை ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அவர் எழுதியிருப்பது தொடர்கதை அல்ல, தொடர்-கதை.

அதாவது பதிவர்கள் அதிகம் பேர் இணைந்து எழுதும் தொடர்+கதை.


ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் என்று கதையை ஹாரிபாட்டர் அவர்கள் தொடங்கியுள்ளார். அதனை வேறொரு பதிவர் தொடர்வார். அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு... சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க.. இப்ப புரியுதா? இல்லைன்னா, இந்த பத்தியை திரும்பவும் படிங்க.

இப்படி  ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மெகா சீரியல் மாதிரி எழுதி உங்களை கொல்ல போறோம். இதில் மகிழ்ச்சியான, உற்சாகமான, பிரமிப்பான, பெருமைக்குரிய... (இப்படி இன்னும் நெறையா இருக்கு, சட்டுன்னு நினைவுக்கு வரல) செய்தி என்னவென்றால், மூன்றாவதாக உங்களைக் கொல்ல போவது "ப்ளாக்கர் நண்பன்" ஆகிய நான் தானுங்கோ!

பயப்படாதீங்க, ப்ளாக்கர் நண்பன் தளத்துல எழுத மாட்டேன். இதே ப்ளாக்கில் தான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடம்பெறப் போகிறது.

நீங்களும் கதை எழுதிக் கொல்லலாம். அதற்கான விபரங்கள்,

எழுதுபவர்களுக்கான விபரங்கள் / அறிவுறுத்தல்கள்

1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.

2. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)

3. கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள் வைக்கலாம்..

4. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்..

மேலும் விபரங்களுக்கு உலக வரலாற்றில் முதல் முறையாக.... பதிவை  பாருங்கள்.

இதில் என்னைப் போன்று கதை எழுத தெரியாதவர்களும் கலந்துக் கொள்கிறார்கள், சிறப்பான கதைகளை எழுதிவரும் பதிவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.

 முதல் கதையினைப் படித்து உங்கள் விருப்பத்தினை ஹாரிபாட்டர் தளத்தில் தெரிவிக்கலாம்.

டிஸ்கி: உங்களைக் கொல்லப் போறோம் என்று சொன்னதன் அர்த்தம், உங்களை ரசிக்க வைத்து, சிரிக்க வைத்து உங்கள் சோகங்களை (கொஞ்ச நேரமாவது) கொல்லப் போகிறோம் என்று அர்த்தமாகும்.

பேஸ்புக் பார்த்ததால் தோள்பட்டையில் அடி

10 Jul 2012

3 comments
அமெரிக்காவின் சான் டீகோவில் (San Diego) கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்பால் (Baseball) போட்டி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் தனது மொபைலில் பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

பேஸ்புக் மொபைலில் Check-In என்றொரு வசதி இருக்கிறது. அதன் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாம். அந்த ரசிகரும் தாம் பேஸ்பால் போட்டியை காண வந்திருப்பதாக சொல்வதற்கு check-In வசதியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த பந்து அவரின் தோள்பட்டையை பதம் பார்த்தது. கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.ஆனாலும் அவருக்கு செம சிரிப்பு. பின்னே இருக்காதா? அடி வாங்கி பிரபலம் ஆகிவிட்டாரே!

இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களை பிறகு பார்க்கலாம்.