கூகுளில் பேய் - நடந்தது என்ன?

31 Jul 2012

நேற்று கூகுளில் பேய் பற்றிய பதிவு போட்டிருந்தேன் அல்லவா? அப்பப்பா.... பேயை பார்க்க என்னா கூட்டம்? என்னா கூட்டம்? சரி, நேத்து பார்த்தது பேயா? இல்லை பொய்யா? என்று பார்ப்போம்.

Google Street View:

Street View என்பது கூகுள் மேப்பில் உள்ள ஒரு வசதியாகும். இதன் மூலம் உலகில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் பார்ப்பது போன்று பார்க்கலாம். இவைகள் 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.

Google Street view cars and Google Trike
இந்த புகைப்படங்கள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன், பிரத்யேகமான கேமராக்களுடன் கூடிய Google Street View Car, Google Trike ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். Google Trike என்பது சைக்கிள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குற்றம் - நடந்தது என்ன?


மேலே உள்ளது தான் நீங்கள் பார்த்து பயந்த(ஹிஹிஹி) பேய் அல்லது பொய் படமாகும். புகைப்படம் எடுக்கும் போது கேமராவில் ஏதோ இருந்திருக்கலாம். அதனை மறைத்திருக்கிறார்கள். மற்றபடி பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கீழுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும்.முக்கிய அறிவிப்பு:

இதனால் சகலமானோருக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்களைக் கொல்லப் போறோம்! பதிவில் சொன்னது போல, பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடரின் மூன்றாம் பகுதியை இறைவன் நாடினால் விரைவில் இந்த தளத்தில் எழுத போகிறேன்.

11 comments:

வரலாற்று சுவடுகள் said...

அப்பாடா... இன்னிக்குத்தான் கொஞ்சம் தெளிவா எல்லாத்தையும் பார்க்க முடியுது! நான் டெம்ப்ளேட்டை சொன்னேன்!

வரலாற்று சுவடுகள் said...

அவங்க கேமராவில் ஏதோ இருந்தது உங்களுக்கு ஒரு வகையில உபயோகமா போச்சு! அதை வைச்சு ரெண்டு நாளை ஓட்டிட்டீங்களே! ஹி ஹி ஹி!

பேயின்னு சொன்னவுடனே எல்லாம் அரண்டு ஓடுவாங்கன்னு பார்த்தா மாங்கு மாங்குன்னு வந்து படிக்கிராங்களே! ஒருத்தருக்கும் பயம் இல்லை! அதுவும் இந்த பிரபு இருக்காப்டியே அவருக்கு துளியும் பயம் இல்லை! ராப் சாங் போட்டிருக்கலாமாம்ல என்னா அடாத்து!

Prabu Krishna said...

அடச்சே பேய வச்சு ஒரு டூயட் பாட்டெல்லாம் ரெடி பண்ணி இருந்தேனே. உண்மையா இருந்தா சுவிஸ்ல பண்ணி இருக்கலாம் ;-)))))

சிட்டுக்குருவி said...

அடடா ஆசை காட்டி இப்படி கவுத்திட்டீங்களே....
நானும் பேயப் பார்க்கலாம் என்னு ஆசையாசையா வந்தேன்...:(

வரலாற்று சுவடுகள் said...

சுஸ்யம் பண்ணுறதுக்கு பேய் பாட்டெல்லாம் எதுக்கு பிரபு..எண்ணெய், மாவு, பாசிப்பயறு, வெள்ளம் இருந்தா போதாது!

கூடுதலா ஒரு அடுப்பும் அதுல கொஞ்சம் தீயும் வேணும் :D

சுவனப் பிரியன் said...

ஹா..ஹா..பேய் படமா?

ஹாரி பாட்டர் said...

டெம்பிளேட் சூப்பர் பாசித் பாய்

பிரேம் குமார் .சி said...

TEMPLATE அருமை பேய் எனக்கு தெரியலயே

Karthik Somalinga said...

:) :)

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவென்று தெரிந்து கொண்டேன்...

நன்றி...
(த.ம. 5)

ஆளுங்க அருண் said...

இதைப் பத்தி ஏற்கனவே பேஸ்புக்கில் பார்த்திருக்கேன்..
அடுத்த நம்பாதீங்க பதிவு போடுவதற்குள், நீங்க சோலியை முடிச்சுட்டீங்க!!