வேட்டையாடு... விளையாடு... (பார்ட் 2)

10 Sept 2012


டெர்ரர் கும்மி நண்பர்கள் இணைந்து கடந்த வருடம் "Hunt for Hint" என்ற மூளைக்கு சவால் விடும் வித்தியாசமான புதிர் போட்டியை நடத்தினர். அது இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது.

மொத்தம் 25 லெவல்கள் கொண்ட இந்த போட்டிக்கு பரிசுத் தொகையும் உண்டு.

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.

நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்.

ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....

விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்.

இந்த போட்டிக்கு காலவரையரை  இல்லை. முதலில் வருபவருக்கே முதல் பரிசு!

இரண்டாவதாக வருபவர்களுக்கு இரண்டாம் பரிசு!

மூன்றாவதாக.... சரி, சரி, அதற்கு பின் உங்களுக்கு தெரியும்.

சென்ற ஆண்டு நானும் கலந்துக் கொண்டேன். எப்படியோ, தத்தி, தாவி ஆறுதல் பரிசு ஐநூறு ரூபாய் பெற்றேன்.

இதை நீங்கள் விளையாடினால் Addict ஆகிவிடுவீர்கள். நான் விளையாடிய போது எனக்கிருந்த மனநிலை,


தற்போது இரண்டாம் ஆண்டாக இந்த போட்டியை நடத்துகின்றனர். வரும் புதன்கிழமை (12.09.2012) தொடங்குகிறது.

இது பற்றிய தகவல்களை பார்க்க: HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

இந்த  போட்டியில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,




14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரு படங்களிலே விளக்கத்தை சொல்லி விட்டீர்கள்...


நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks for sharing

சீனு said...

இந்த வருஷம் விளையாடி பாத்ருவோம்

MARI The Great said...
This comment has been removed by the author.
MARI The Great said...

//மூளைக்கு சவால் விடும் வித்தியாசமான புதிர் போட்டி//

அப்பாடா அப்ப இது நமக்கு இல்லை! :)

MARI The Great said...

//ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்//

இவ்வளவு கஷ்டப்பட்டு பதிலை எங்காவது ஒழிச்சு வைக்கிறதுக்கு நேரடியாவே பதிலை வைச்சிரலாம்ல..! :)

MARI The Great said...

//முதலில் வருபவருக்கே முதல் பரிசு! //

இதை சொன்னதுக்கு தான் ஒருத்தர் கொஞ்சகாலமா திகார் ஜெயில இருந்தார்...

MARI The Great said...

//இந்த போட்டியில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமானால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்//

எங்காவது கொஸ்டின் பேப்பர் ரிலீஸ் ஆகுதான்னு பார்க்கணும் அதுதானே?

MARI The Great said...

ஹி ஹி இந்த கருத்தை படிக்கும் போது எனக்கே சிரிப்பு வரலை அதான் நானே நீக்கிட்டேன் ஹி ஹி ஹி!

JR Benedict II said...

அறிவு அறிவு

JR Benedict II said...

இது ஓகே சிரிங்கப்பா எல்லாரும்

JR Benedict II said...

சேம் SAME

”தளிர் சுரேஷ்” said...

தகவலுக்கு நன்றி!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html


உழவன் said...

பெரியவங்களாம் அப்படி சொல்லபிடாது அண்ணே..