தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன்

26 Aug 2012

இந்த தளத்தில் நான் சிறிது நேரங்களுக்கு முன்பு "தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் " என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். ஆனால் அதில்

"பதிவில் சந்திப்பில் எடுத்த புதிய படங்களை யாராவது விரைவாக பதிவேற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும்."

என்று  தான் சொல்லியிருந்தேன், புகைப்படங்களை பகிரவில்லை.

இது தவறு தான்! இப்படி தலைப்பிட்டு ஏமாற்றியதற்கு தங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இனி இது போல செய்வதை தவிர்க்கிறேன்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், இதனை ஹிட்டுக்காக நான் எழுதவில்லை. இந்த தளத்தில் நான் எப்போதாவது தான் பதிவு போடுகிறேன். நகைச்சுவையாக தான் அவ்வாறு பதிவிட்டேன். ஆனாலும் இது தவறுதான். மன்னித்துவிடுங்கள்!

29 comments:

JR Benedict II said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா

பட்டிகாட்டான் Jey said...

நீர் மனுஷன்யா... ஐ லைக் யூ...

K said...

நானும் அப்பதிவைப் படித்தேன்! அதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை! அதனை ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்!

உலகில் முக்கிய சம்பவங்கள் நடைபெறும் போது பிரபல பத்திரிகைகள் கூட இப்படியான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன! ஆகவே இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை நண்பரே!

MARI The Great said...

அட விடுங்க நண்பா! நாட்டுல அவனவன் என்னென்னமோ செஞ்சுட்டு கெத்தா திரியும் போது இதற்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுகிட்டு!

ஆனாலும் மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)

MARI The Great said...

அட பதிவையே தூக்கிபுட்டீங்களே :((

Anonymous said...

இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே சகோ. இதற்கெல்லாமா சிலர் சீரியஸாகின்றார்கள் !!!

பதிவுகள் என்பது பாதி ஊடகம் - பாதி சமூகத் தளம். சமூகத் தளத்தில் எள்ளல், நகைச்சுவை, விளையாட்டுக் குணம் என்பதெல்லாம் இயல்பான ஒன்று !!!

ஒரு அளவுக்கு மிஞ்சி யார் மனதையும் புண்படுத்தாமல், ஆபாசமில்லாமல், வசைப்பாடாமல், ஒருமையில் விளிக்காமல் இருந்தாலே போதுமானது .... !!!

உங்களின் இயல்பு விளையாட்டுக் குணம் என்றால் அதனை இரசிக்கத் தான் வேண்டுமே ஒழிய திட்டக் கூடாது !!!

இதுக்கு எல்லாம் மன்னிப்பு TOO MUCH BRO !

Manimaran said...

ம்ம்... நடக்கட்டும்...

ஸாதிகா said...

சலாம்.சின்ன தம்பி பாசித்தின் பெரிய மனதிற்கு ஒரு ராயல் சல்யூட்.

ஆத்மா said...

நீங்க மனிசன் பாஸ்...நாங்க மகா மனிசன் பாஸ்..

Admin said...

நன்றி நண்பா! ஆனாலும் போட்டோக்களை பார்ப்பதற்காக ஆவலுடன் வந்தவர்களை ஏமாற்றியது தவறு தான்!

Admin said...

சீரியஸ் இல்லை சகோ.! புகைப்படங்களை ஆவலுடன் காண வந்து அது இல்லாததால் வந்த ஏமாற்றம்.

நம் விளையாட்டு குணம் யாருக்கு ஏமாற்றம் அளிக்காமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை.

அந்த வகையில் நான் செய்தது தவறு தான்!

:) :) :)

VANJOOR said...

தமிழ் பதிவுலக‌த்தின் பயனுள்ள‌ செல்லப் பிள்ளையான அப்துல் பாசித் செய்த சிறு குறும்பை யாவரும் ரசித்திருப்பார்களே தவிர எவரும் பெரிது படுத்தியிருக்க மட்டார்கள்.

ஆயினும் நற்பண்பை நிலைப்படுத்திய அப்துல் பாசித்தின் உயர்குணத்திற்கு பாராட்டுக்கள்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

சீனு said...

தல இதுக்குலாம் போய் நீங்க மனிப்பு கேக்கலாமா...

// ஆனாலும் மன்னிப்பு கேட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)//

யோவ் வரலாறு உங்க பேச்சுல கிண்டல் தெரியுதே

#கொளுத்திப் போட்டிங் ஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் said...

அட... என்னங்க நீங்க... இதெல்லாம் ஒரு விசயமா?

Prabu Krishna said...

ஹா ஹா ஹா. படம்னு சொல்லிட்டு படம் காட்டிட்டீங்களே. :-))))

tech news in tamil said...

விடுங்க பாஸ் feel பன்னாதிங்க.......

சிராஜ் said...

பாசித்,

எனக்கும் பெரிய குற்றமா தெரியல.. பட்...உங்க அண்ணன் வழி எப்போதுமே தனி வழி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

ராஜ நடராஜன் said...

Gentle and positive approach!

Jaleela Kamal said...

ஹிஹி

Rabbani said...

பொய்மையின் மூலம் ஹிட்ஸ் அள்ளுவது தவறுதான் ... தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட நீங்க ரொம்ப நல்லவர்

ADMIN said...

அட்ரா சக்க.. அட்ரா சக்க.. அட்ரா சக்க.. !

சி.பி.செந்தில்குமார் said...

இதெல்லாம் சகஜம், ஜாலியா எடுத்துக்கனும்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.அப்துல் பாஸித்..!

தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது மகா பெரிய விஷயம் சகோ..! நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்..! இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக..!

சதீஷ் செல்லதுரை said...

இன்னிக்கு பாதி பதிவு அப்படித்தான் இருக்கு ...கேட்டா மொக்கை பதிவுன்னு முகமூடி போடுறாங்க....நீங்க பீல் பண்ணாம இதை மாதிரி இன்னொன்னு போட வேண்டுகிறேன்....

அருணா செல்வம் said...

அடடடா....
ஒரே தொல்லையா போச்சி உங்கூட...
மன்னிச்சிட்டோம்ன்னா அதை ஏத்துக்கனும்...

சரிசரி வுடு.

Avargal Unmaigal said...

என்ன தம்பி இதற்கெல்லாம் ஒரு மன்னிப்பு பதிவா போங்க தம்பி. நீங்க இட்ட பதிவை சீரியஸா எடுத்தவங்களை அப்படியே ஒரு ஒரமாக போய் உட்காரச் சொல்லுங்க. யாரு அதை எப்படி எடுத்துகிட்டாங்களோ இல்லையோ அதை நான் மிகவும் டைமிங்க் காமடியாகதான் எடுத்து கொண்டேன்.. பதிவு இடுவதில் வித்தியாசம் இருக்க வேண்டும் அந்த திறமை உங்களிடம் இருக்கிறது. அதை தொடருங்கள்...


சரி நானும் உங்களை மன்னிச்சு விட்டுட்டேன் அதனால மறக்காம அல்வா ஒரு பார்சல் வாங்கி அனுப்பங்க

அனைவருக்கும் அன்பு  said...

எப்படியோ எல்லோரையும் பரிதவிக்க வைத்துவிட்டீர்கள் உங்களுக்காக

Admin said...

மன்னிச்சதுக்கு நன்றி அண்ணா! அப்புறம் "அல்வா கொடுத்த அப்துல் பாஸித்" என்று வரலாறு தவறாக பேசும். அதனால் அனுப்பவில்லை.

:D :D :D

யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னூட்டங்களில் "என் மேல் உள்ள நம்பிக்கையுடன் வந்து பார்த்தப்பின் ஏற்பட்ட ஏமாற்றம்" தெரிந்தது. அதனால் தான்...

Admin said...

அவ்வ்வ்வ்வ்.. எல்லோரையும் பரிதவிக்க வைத்ததற்காக தனியாக மன்னிப்பு பதிவு எழுதவா சகோ?

:D :D :D