மூன்றாம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் - தொடர்

4 Aug 2012

யுத்தம் ஆரம்பம் - இது பதிவர்கள் பலர் ஒன்றிணைந்து எழுதும் மெகா தொடர் கதையாகும். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பதிவர்கள் எழுதும் இந்த கதை முற்றிலும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதனை மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் திரைப்படக் கதையாக மட்டும் பார்க்கவும். இனி கதைக்கு செல்வோம்.....

பகுதி  1 - ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் - ஹாரி பாட்டர்

பகுதி 2 - துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - சீனு

மூன்றாம் யுத்தம் தொடர்கிறது...

#################################################################################

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் குழுமியிருக்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று வந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க காரிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது.

காக்கிச்சட்டையினுள் அடங்க முடியாமல் உடல் திமிறிக் கொண்டிருக்க சிங்கம் போல நடந்து வந்தார் இன்ஸ்பெக்டர் சூர்யா. நடந்து வரும் போதே தன்  கையில் இருந்த கருப்பு நிறக் கண்ணாடியை கண்களில் பொருத்த, பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்தனர்.

"சார்! நீங்க தான் இந்த கேஸை விசாரிக்கப் போறதா கேள்விப்பட்டோம். குற்றவாளிகளை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவீன்களா?"

"இதுல எதிர்கட்சியோட சதி இருக்குமா?"

"சொந்தக் கட்சியிலேயே சில பேர் இதுல சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்களே? அது உண்மையா சார்?"

"பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி இது நடந்திருக்கிறது என்றால், காவல்துறையில உள்ளவங்களுக்கும் இதுல பங்கு இருக்கா சார்?"

நிருபர்கள் ஒவ்வொருவரும் சரமாரியாக கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க, கடைசிக் கேள்வியால் சூர்யா டென்ஷன் ஆனார்.

"நான் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. விசாரணைக்கு பின்னால் தான் உண்மை என்னவென்று தெரியும். அதுவரைக்கும் உங்க யூகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. சாரி!" சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே சென்றார்.



அறையில் டி.ஜி.பி ராஜேந்திரன் அமர்ந்திருக்க அவருக்கு சூர்யா சல்யூட் அடித்தார்.

"வாங்க மிஸ்டர் சூர்யா! உங்களுக்காகத் தான் காத்திட்டு இருக்கேன். உட்காருங்க!"

"தேங்க்யூ சார்!" என்று சொல்லி சூர்யா அமர்ந்தார்.

"முதல்வரோட நன்றி அறிவிப்பு மாநாட்டுல நடந்தை கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்"

"ஆமா சார்! எனக்கே அதிர்ச்சியா இருந்தது"

"உங்களால தான் இந்த கேஸை சீக்கிரம் முடிக்க முடியும்னு எனக்கு தோணுச்சு. அதனால தான் நான் உங்களை கூப்பிட்டேன். இந்த ஃபைலில் நிகழ்ச்சி நடந்தப்ப எடுத்த போட்டோ, வீடியோக்கள், ஃபாரன்சிக் ரிப்போர்ட் எல்லாம் இருக்கு. இதுல ஏதாவது துப்பு கிடைக்குமான்னு பாருங்க"

"ஓகே சார்!"

"சூர்யா! உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் சொல்றேன். இது ஒரு சென்சேசனல் கேஸ். சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பாருங்க"

"புரியுது சார்! ஐ வில் டு மை பெஸ்ட்"

"அப்புறம் உங்களுக்கு கணேஷ்-வசந்தை தெரியும் தானே?"

"கணேஷ் வசந்த் அந்த லாயர் கம் டிடெக்டிவ்ஸ் தானே சார்?"

"ஆமா அவங்க தான். முதல்வர் தனிப்பட்ட முறையில அவங்களை விசாரிக்க சொல்லியிருக்கார். தேவைப்பட்டால் அவங்களோட கோ-ஆப்பரேட் பண்ணுங்க"

"முதல்வர் ஏன் சார் அவங்களை கூப்பிடனும்?"

"ஒரு வேளை நம்ம டிபார்ட்மென்ட் மேல நம்பிக்கை இல்லாமல் கூட இருக்கலாம்."

"சரி சார்! இப்பவே நான் என் விசாரணையை தொடங்குறேன். அப்ப நான் கெளம்புறேன் சார்!"

"ஆல் தி பெஸ்ட் சூர்யா!"

"தேங்க்யூ சார்!" சொல்லிக் கொண்டு சூர்யா டி.ஜி.பியிடமிருந்து விடைப்பெற்றார்.

##################################################################################

சென்னை விமான நிலையம் எப்போதும் போல பரப்பரப்புடன் காட்சி அளித்தது.

"கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்களை விட்டுடுறாங்க. வெளிநாட்டுல வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்து நகை வாங்கிட்டு வரும் நம்மகிட்ட காசு புடுங்குறாங்க. எல்லாம் நம்ம தலையெழுத்து!" சுங்கத் துறையை திட்டிக் கொண்டே பயணிகள் செல்ல, Arrival பகுதியில் அஜித்தும், விஜயும் காத்திருந்தனர். அவர்கள் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.



சிறிது  நேரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டு கமல் வந்தார். உடனே இருவரும் சென்று வரவேற்றனர். இருவரையும் கட்டியணைத்தார் கமல்.

"எப்படிப்பா இருக்கீங்க?"

"எப்படி அங்கிள் இருக்கீங்க?" அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"நான் நல்லா இருக்கேன்மா! அப்பா எப்படி இருக்கார் விஜய்?"

"இப்ப தேவலாம் அங்கிள். கையில தான் லேசான அடி. வீட்டில் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கார்"

அஜித் ட்ராலியை தள்ளிச் செல்ல மூவரும் காரில் ஏறினர்.

"நான் அப்பவே ரஜினிகிட்ட சொன்னேன். அரசியல் வேண்டாம், உனக்கு சரிப்பட்டு வராதுன்னு. ஆனா அவன் கேட்கலை. இப்ப பாருங்க, பதவி ஏற்று ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு" கமல் சொன்னார்.

"இல்லை அங்கிள்! இதுல அரசியல் காரணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். வேற ஏதோ நடந்துட்டு இருக்கு. விபரீதமா ஏதோ நடக்க போகுதுன்னு எனக்கு தோணுது"

"எதை வைத்து சொல்ற விஜய்?"

"ஆமாம்பா! எனக்கும் அதான் தோணுது. எங்களுக்கு வந்த எஸ்.எம்.எசை பாருங்க" என்று சொல்லிக் கொண்டே அஜித் தன்னிடமிருந்த மொபைலை கமலிடம் காட்ட, கமலின் முகம் மாறியது.

##################################################################################

இரவு பத்து மணி. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் சூர்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"என்னங்க! இன்னொரு தோசை ஊத்தவா?"

"எனக்கு போதும்மா! நீ சாப்பிடு!" சூர்யா பதில்சொல்லும்போதே மேஜையில் இருந்த அவரின் மொபைல் ஒலித்தது.

"ஹலோ! யார் பேசுறது?"

"........................"

"ஆமா! சூர்யா தான் பேசுறேன்"

"........................"

"ம்ம்ம்ம்"

"........................."

"எந்த இடத்துல நடந்தது?"

"........................."

"சரி! இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே வர்றேன்" போனை கட் செய்து, மனைவியிடம் சொல்லிவிட்டு அவசரமாக காரில் கிளம்பினார்.

பெசன்ட் நகர் பீச் அருகே ஒரு வீடு மட்டும் தனியாய் தெரிந்தது. வீட்டின் வடிவமைப்பும், அலங்கார விளக்குகளும் வெளிநாட்டு தரத்தில் இருந்தது.

காவல்துறையினர்  சூழ்ந்திருக்க, சூர்யாவின் கார் வந்து நின்றது.

"வாங்க சார்!" சப் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன் வரவேற்க இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்க அதனை ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

"உங்களை கூப்பிட்டதற்கு இது தான் சார் காரணம்" என்று சுவற்றை காட்டினார் லிவிங்ஸ்டன். அங்கே ரத்தத்தால் ஆங்கில வாசகம் எழுதப்பட்டிருந்தது.

WAR BEGINS


##################################################################################

யுத்தம் தொடரும் இடம் - சின்னமலை - தல போல வருமா


அதனை தொடர்ந்து யுத்தம் செய்யவிருப்பவர்கள்:

பகுதி 5 - SCENECREATOR -யாவரும் நலம்
பகுதி 6 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்
பகுதி 7 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்
பகுதி 8- ராஜா - என் ராஜ பாட்டை
பகுதி 9 - JZ - JZ சினிமா
பகுதி 10 - ராஜ் -சினிமா சினிமா
பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள்
பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக்
பகுதி 13 - அருண் - அவிழ்மடல்
பகுதி 14 - மதுமதி - தூரிகையின் தூறல்
பகுதி 15 - சென்னை பித்தன் - நான் பேச நினைப்பதெல்லாம்
பகுதி 16 - வெங்கட் சீனிவாசன் - கையளவு மண்
பகுதி 17 - பாரதி - சிகரம்
பகுதி 18 - நீங்களாகவும் இருக்கலாம். அது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

51 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பப்பா... மிரட்டுதே....

நன்றி…
(த.ம. 2)

Prem S said...

ம்ம் தொடர் அசத்தலாக செல்கிறது அடுத்தவர் எப்படி தொடர போகிறாரோ

MARI The Great said...

பல நாட்களுக்கு முன்பு ஒருவர் பல்துலக்காமல் இருந்ததையும் துல்லியமாக கண்டிபிடிக்கும் நுண்ணறிவு கொண்ட சூர்யாவிற்கு இந்த கேஸ் ஜிலேபி என்பதே என் கணிப்பு :D

சீனு said...

நண்பா யாரோ ஒருத்தர் நாலு நாளைக்கு முன்னாடி என் ப்ளாக்க்கு வந்து எனக்கு கதைனா என்னனே தெரியாது கதை எழுதத் தெரியாது...நல்ல இல்லாட்ட என்ன திட்ட கூடாதுன்னு ஒரு நண்பர் சொன்னாரு அவரைத் தான் இங்க தேடி வந்தேன்...

பாஸ் பயங்கரமா கதை எழுதிட்டு எழுதவே தெரியாதுன்னு சொன்னா எப்டி பாஸ்... ஸ்டார்டிங் ல ஆரம்பிச்ச விறுவிறுப்பு கடைசி வரைக்கும் குறையல.... கணேஷ் வசந்த், அஜித் விஜய்ன்னு நான் கையாண்ட பாத்திரங்களின் தொடர்ச்சி அருமை...

உங்கள் விசாரணைக்கு குவியப் போகும் பாராட்டுகளை எதிர் நோக்கி ஆவலுடன் காத்துள்ளேன் நண்பா.....

இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்ட நண்பன் ஹாரிக்கு மனபூர்வமான நன்றிகள்

தமிழ்மணம் என் வைக்கும் சேர்ந்து கொண்டது நண்பரே

சின்ன waiting for u only

Thalapolvaruma said...

கண்றாவியாய் இருக்க போகுது

Thalapolvaruma said...

நான் என்ன செய்ய போறேனா தெரியலை இதில் மாட்டிவிட்ட ஹாரி நீ செத்த

ஸ்ரீராம். said...

துப்பு துலக்க அடுத்த ஆளும் ரெடியா.... பத்து பகுதிக்குள்ள துப்பை எல்லாம் நல்லா துலக்கி பனிரெண்டாவது பகுதிக்கு சாதா கதையா மாத்திக் குடுங்கப்பா.... நமக்கு க்ரைம் எல்லாம் வராது!

JR Benedict II said...

நான் என் பகுதி கதையை எப்படி தொடங்கினேனோ தெரியவில்லை.. ஆனால் அதற்க்கு பிறகு நண்பன் சீனுவும் நீங்களும் சேர்ந்து கதையை எங்கயோ கொண்டு போகுரீர்கள்.. எல்லாவற்றையும் விட எழுத்துக்களில் மட்டும் பார்த்த சில கதா பாத்திரங்களை நடிகர்கள் கூட தொடர்பு படுத்தி கதைக்குள் மிக நேர்த்தியான எழுத்துக்களில் உலாவ விட்டு இருக்குறீர்கள்.. (சீனுவும் நீங்களும்) கொஞ்சம் பிசகும் என்றாலும் வாசிக்கிறவங்க டென்ஷன் ஆயிடுவாங்க.. கணேஷ் வசந்தை பயன்படுத்தி தோற்றவர்கள் அநேகர்.. கடைசியான இரு கதைகளையும் தொடர்ந்து வாசித்த போது உண்மையில் பெரிய திரில்லர் கதையை வாசிக்கும் உணர்வு வந்து போனது.. கலக்குறிங்க..

JR Benedict II said...

தன்னடக்கம் தப்பா நினைக்காதிங்க.. HI HI

JR Benedict II said...

//நல்ல இல்லாட்ட என்ன திட்ட கூடாதுன்னு ஒரு நண்பர் சொன்னாரு அவரைத் தான் இங்க தேடி வந்தேன்... //

ஆமாய்யா பாரேன் இந்த பயலுக்குள்ள என்னவோ இருந்து இருக்கு..

JR Benedict II said...

நல்ல நண்பன் வேண்டுமென்று அந்த மரணமும் நினைகின்றதா?????

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல்... தொடர் விருவிருப்பு கூடிட்டே போது....

வாழ்த்துகள்... உங்களுக்கும் அடுத்த பகுதியைத் தொடர்பவருக்கும்....

Admin said...

நன்றி சார்!

Admin said...

@பிரேம் குமார் .சி

நன்றி நண்பா!

Admin said...

ஹிஹிஹிஹி... அதனால தான் அவரை கூப்பிட்டிருக்கார் டிஜிபி.

Admin said...

@சீனு

//எனக்கு கதைனா என்னனே தெரியாது// அப்படி சொல்லலையே... :D

உங்க கதைல தேர்ந்த எழுத்தாளரின் நடை தெரிந்தது. அதனால் கதையை நான் சொதப்பிவிடுவேனோ? என்ற பயம் இருந்தது. உங்களக்கு காட்டிய ட்ரைலரில் கூட தெரிந்திருக்கும்.

கதை தங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி நண்பா! எழுத அழைத்த ஹாரிக்கும் என் நன்றி!

Admin said...

@chinna malai

இப்படி தான் நானும் சொன்னேன், முதலில்... ஹிஹிஹிஹி

பயப்படாம எழுதுங்க...

@ஹாரி பாட்டர்

அஜித் ரசிகர்கிட்ட விஜய் பட்டை பாடரீங்களே, அவர் அடிக்க வர்ற போறார்.... :D

Unknown said...

சூப்பர் பேசமா படம் எடுக்கலாம் பாஸ் நீங்க அருமையா இருக்கு கதை

அளவான மொக்கை அருமையான கதை 60/100

ராஜ் said...

அருமையான எழுத்து நடை...கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது...நல்ல க்ரைம் நாவல் படிக்கிற மாதிரியே இருக்கு பாஸ்....

JZ said...

வாவ்.. எல்லா இடத்துலயும் War Beginஆகிக்கிட்டே இருக்கே!!

scenecreator said...

நண்பா. அஜித் கமலின் மகன் என்று முதல் பகுதில் உள்ளது.ஆனால் உங்கள் பகுதில் விஜய் அஜித் இருவரும் கமலை அங்கிள் என்று அழைபதாய் சொல்லி உள்ளீர்கள். மற்ற படி சூப்பர். வாழ்த்துக்கள்.

Admin said...

இல்லை நண்பா.

//"எப்படிப்பா இருக்கீங்க?"// இது அஜித்

//"எப்படி அங்கிள் இருக்கீங்க?"// இது விஜய்

அடுத்தவரியில் இப்படி சொல்லியுள்ளேன்.

//அஜித்தும், விஜயும் ஒரே நேரத்தில் கேட்டனர்.//

வாழ்த்துக்கு நன்றி நண்பா!

Admin said...

நான் என்ன செய்யுறது சார்? அறிமுகத்தை காமெடியா எழுதிட்டு முதல் பகுதியை த்ரில்லிங்கா தொடங்கிட்டார் ஹாரி. அதை தொடர்ந்து சீனுவும் த்ரில்லிங்கா கொண்டு செல்ல, நானும் அதை தொடர வேண்டியதாகிவிட்டது. யாராவது மாற்றுவார்கள் என நினைக்கிறேன்.

Admin said...

நன்றி நண்பா! கணேஷ்-வசந்த கேரக்டரை சொதப்பக் கூடாது என்பதற்காகத் தான் அவர்களை கதையில் சேர்க்கவில்லை. ஆனால் தொடர்பு படுத்திவிட்டேன்.

Admin said...

வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

Admin said...

நன்றி நண்பா! நீங்க தயாரிப்பாலரா ஆனா படம் எடுக்க நான் ரெடி! :D

Admin said...

வாழ்த்துக்கு நன்றி பாஸ்!

Admin said...

அதான் பாஸ் எனக்கும் தெரியல! எல்லாரும் தொடங்கி வச்சிட்டே இருந்தா முடிக்க போறது யாரு? :D

”தளிர் சுரேஷ்” said...

விறுவிறுப்பான நடை! சூப்பர்! தொடரட்டும்!

இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
http://thalirssb.blogspot.in

Karthik Somalinga said...

நன்றாக எழுதி உள்ளீர்கள்!!! மூன்றாம் உலகப் போரும் ஆரம்பித்து விட்டது! ஆனா யாருமே சண்டை போட மாட்டீங்கறீங்களே, ஏன்? :D

சிகரம் பாரதி said...

பதிவின் நீளம் குறைவு போல? ஆனாலும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள். வலைப்பதிவுலகில் ஒரு புதிய முயற்சி அழகாக போகிறது. வாழ்த்துக்கள். அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?

http://newsigaram.blogspot.com/

தனிமரம் said...

வித்தியாசமாக கதையை நகர்த்திவிட்டீர்கள் நண்பா!

தனிமரம் said...

அடுத்த நண்பர் ஆரம்பம் பார்ப்போம் .

ஹாலிவுட்ரசிகன் said...

நீங்க கதையை நல்லா நகர்த்திட்டீங்க. ஐயய்யோ ... பரீட்சைக்கு ரெடியாவது போல இப்பவே வேர்த்துக் கொட்ட ஆரம்பிக்குதே. கதை வேற எங்கெங்கோ யு டர்ன் போடுது.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமையாகத் தொடர்ந்திருக்கிறீர்கள். என் தளத்துக்கும் வாருங்கள். என் பதிவுகளோடு என் தளத்தில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
varikudhirai.blogspot.com

பால கணேஷ் said...

சரிதான்... இந்த ரிலேரேஸ்ல பின்னாடி என் கைக்கு வந்து சேர்றப்ப என்ன கண்டிஷன்ல இருக்கப் போவுதோ... திகிலை கிளப்பறீங்கப்பா... கதையில மட்டும் இல்ல... எனக்குள்ளயும். என்னமோ போடா கணேஷா...!

Admin said...

நன்றி நண்பரே!

Admin said...

ஹா...ஹா..ஹா... இப்போதைக்கு இது த்ரில்லரா போயிட்டிருக்கு, இதனை ஆக்சன் த்ரில்லராக்குவது பின்னால் வருபவர்கள் கையில் தான் உள்ளது. :D

Admin said...

ஆம் நண்பரே! மூன்று காட்சிகள் மட்டுமே வைத்துள்ளேன். நான்காவது காட்சி வைத்தால் நீண்டுவிடுமோ என நினைத்து வைக்கவில்லை.

வருகைக்கு நன்றி நண்பரே!

Admin said...

நன்றி நண்பா!

Admin said...

நானும் காத்திருக்கிறேன் நண்பா!

Admin said...

ஹிஹிஹிஹி... நன்றி நண்பரே! அடுத்த இரண்டு பகுதிகள் வரும் வரை நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். :D

Admin said...

நன்றி நண்பரே!

Admin said...

சார்! கதை எப்படி உங்க கைக்கு வந்தாலும் அதை பிரமாதமாக தொடர உங்களால் முடியும். :D

kaialavuman said...

நீங்களெல்லாம் இப்படி கலக்கி எழுத, கடைசியில் எங்களிடம் வரும் என்று நினைக்கும் பொழுது வயிறு கலக்குகிறது.

உழவன் said...

நண்பா ஆரம்பிச்ச விறுவிறுப்பு கடைசி வரைக்கும் குறையல.... சூப்பர் நண்பா...

இன்னும் என்னலா நடக்கபோதோ?..ஹா ஹா..

scenecreator said...

ஓஹ். சாரி நண்பா.குறை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.அந்த படித்துக்கொண்டே வந்த போது அந்த வரியை கவிந்ததால் வந்த குழப்பம்.மன்னிக்கவும்.

Admin said...

தவறாக எடுத்துக் கொள்ளவில்லை நண்பா! தவறை சுட்டிக் காட்டுவதை நான் வரவேற்கிறேன். :D

Admin said...

ஹா..ஹா..ஹா... பயப்படாம இருங்க நண்பரே! உங்கள் கைக்கு கதை வருவதற்குள் கதையின் போக்கு தெரிந்துவிட்ம். தொடர்வதற்கு எளிதாக இருக்கும்.

Admin said...

நன்றி நண்பா!