கூகுள் மேப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதில் பேய் படம் இருப்பதாக கடந்த ஆண்டு செய்தி வந்தது. வாருங்கள், நாமும் அந்த பேயை (???) பார்க்கலாம்.
1. https://maps.google.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
2. அங்கே பெட்டியில் 47.110579,9.227568 என்று கொடுத்து என்டர் தட்டுங்கள்.
3. பிறகு பச்சை நிற கீழ்நோக்கும் அம்புக்குறியை (Down Arrow) கிளிக் செய்து, Street view என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. சுவிட்சர்லாந்தில் உள்ள சாலை தெரியும். அந்த படத்தின் மேலே இடது ஓரமாய் வட்ட வடிவில் Navigation வசதி இருக்கும். அதில் மேலே செல்வதற்கு இரண்டுமுறை அழுத்துங்கள். இடது புறம் செல்வதற்கு இரண்டு முறை அழுத்துங்கள்.
5. அதில் தெரியும் பேயை (??) பார்த்து பயப்படுங்கள் அல்லது சிரியுங்கள் அல்லது என் மேல் கோபப்படுங்கள்.
6. கீழே இருக்கும் ஓட்டுப் பட்டைகளில் ஓட்டுக்களை போடுங்கள்.
7. சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
8. உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
9. வேறொரு நல்ல பிளாக்கிற்கு சென்று விடுங்கள்.
10. மீண்டும் நான் பதிவிட்டப் பின் இங்கே வாருங்கள்.
11. அந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
12. Step ஆறிலிருந்து திரும்பவும் செய்யுங்கள்.
டிஸ்கி: பேயை (???) பார்த்த பிறகுகீழுள்ள டிஸ்கியை படியுங்கள்.
துணை டிஸ்கி: பேய் இருப்பதாக நான் நம்புவதில்லை. இது பேயும் அல்ல.
கூகுளில் பேய் - நடந்தது என்ன?
Tweet | |||
41 comments:
இருங்க நண்பா.......செய்து பார்த்திட்டு வந்திடுறன்.....
அட உண்மையிலே பேய் இருக்குப்பா
தகவலுக்கு மிக்க நன்றி
இப்பவே சொல்லிடுறன் என் நண்பர்களுக்கும்
அது பேய் இல்லை. காரணத்தை நாளை சொல்கிறேன். அப்ப தான் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். :D
மொக்கையிலும் ஒரு தொழில்நுட்பம் பதிவு போடுறீங்க பாருங்க...உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை உங்களை அடிக்க அந்த பேய் தான் வரணும் ஹி ஹி!
//சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்//
கண்டிப்பா..., நாம பயந்ததோட நிப்பாட்டிகிட்டா எப்புடி ஹி ஹி!
///Step ஆறிலிருந்து திரும்பவும் செய்யுங்கள்//
இப்பிடியே திரும்பி திரும்பி செஞ்சிகிட்டு இருந்தா விடிஞ்ஜிரும் ஹி ஹி!
///மீண்டும் நான் பதிவிட்டப் பின் இங்கே வாருங்கள்///
ஆமா.. கொஞ்ச நஞ்ச உயிரோட தப்புனவங்க நாளைக்கும் வாங்க! :D
btw, goole map simply super... extraordinary clear... amazing technology!
மல்லிகைப்பூ இல்ல, வெள்ளை புடவை இல்ல, பாட்டு இல்ல. இதெல்லாம் பேயா போங்க சகோ யார ஏமாத்துறீங்க?
///
Prabu Krishna said...
மல்லிகைப்பூ இல்ல, வெள்ளை புடவை இல்ல, பாட்டு இல்ல. இதெல்லாம் பேயா போங்க சகோ யார ஏமாத்துறீங்க?
///
யோவ் அது ஹாலிவுட் பேய்யா., அப்பிடித்தான் இருக்கும்! நீங்க இன்னும் தமிழ் நாட்டு பார்டரை தண்டல போல இருக்கே!
@ prabhu..,
sorry for using singular pronunciation :)
அந்த குகைக்குள்ள தேடி பார்த்து விட்டு வந்து .... உன்னை ...!
@ வரலாற்று சுவடுகள்
ஹாலிவுட் பேயா? அப்போ ஒரு ராப் சாங் போட்டு இருக்கலாம்.
//நீங்க இன்னும் தமிழ் நாட்டு பார்டரை தண்டல போல இருக்கே! //
தாண்டி வந்து பெங்களூர்ல இருக்கோம். ;-)
//sorry for using singular pronunciation :)//
ஆமாங் நான் இன்னும் சிங்கிள் தாங் ;-)))))
///
Prabu Krishna said...
ஹாலிவுட் பேயா? அப்போ ஒரு ராப் சாங் போட்டு இருக்கலாம்.
///
தம்பி சினிமா துறையில இருக்குறதுனால நிறைய நடிகைகல மேக்கப் இல்லாம பாத்திருக்கும் அதான் விளையாடுது!
அட ஆமா..
சுவிசர்லாந்திலா!!!!!.......ம்ம்ம்கூ.......ஏற்கனவே சூரிச் என்னும் இடத்திற்கு போகும் சுரங்கப் பாதையில் இருந்து மிக மோசமான உயிரிழப்பைத் தந்த பேயாரை சைனாக்கார மாமா வந்து துரத்தியதை
அறிந்தோம் .திரும்பவும் நாங்க பார்த்து பயப்பட வேணுமா சகோ?:..!!வேண்டவே வேண்டாம் :(.......ஒட்டு மட்டும் போடுகின்றேன் எல்லாரும்
பார்த்து பயப்படுங்கோ :):) மிக்க நன்றி பகிர்வுக்கு என சொல்ல மாட்டேன் சகோ .....
பே !
பேய் பிரமாதம்,சமுகத்தில் பல பேயுடன் பழகுவதால் இது கொசு தாங்கோ...
நண்பா சின்ன குழந்தையை இப்படியா பயம்படுத்துறது
:)- :)- :)- :)- :)- அந்த போயி கூட பரவயில்லை
உன் மொக்கை தான் தாங்க முடியவில்லை பாஸு
மொக்கை தான் பேய் பிரமாதம்
பேய் என்னை அடிச்சா நீங்க பேயை அடிக்க மாட்டீங்களா என்ன?
சூப்பர்...!
அடுத்த பதிவு போட்ட பிறகு தான் நண்பா!
ஆமா...ஆமா...
உண்மை தான் நண்பா! கூகிளாச்சே...!
ஹிஹிஹி...
ஆமா.. சுவிட்சர்லாந்தில் இருக்குல்ல, அப்ப அது ஹாலிவுட் பேய் தான்
குகைல இல்ல நண்பா.. குகைக்கு வெளில தான் உள்ளது. :D
கடைசி பதில் செம...! :D
:D :D :D
இது பேய் இல்லை சகோ. சும்மா விளையாட்டுக்கு.. அடுத்த பதிவில் காரணத்தை சொல்றேன்.
பயப்படக்கூடாது...!!!
ஒரு வகையில் உண்மைதான் நண்பா!
ஹிஹிஹிஹி...
//உன் மொக்கை தான் தாங்க முடியவில்லை பாஸு//
உங்கள் அங்கீகாரத்திற்கு நன்றி பாஸு..
ஹிஹிஹிஹி
ஹி ஹி ஹி.
பாத்துகிட்டு சும்மாவா இருப்பேன்...., தெறிச்சு ஓடிட மாட்டேன் முதல் ஆளா ஹி ஹி ஹி!
ஆத்தி நானே.......பல்பு வாங்கிட்டேனா நண்பர்களிட்ட........
ஹிஹிஹிஹி...
ரெண்டு நாலா காய்ச்சல்.மொக்கை பதிவால். (பேயை பார்த்து அல்ல. )
நண்பரே... உங்களின் இந்த தளத்திற்கு முதல் தடவையா வருகிறேன்...
இப்படியா பயமுறுத்துகிறது... ஹா... ஹா... தொடருங்கள்... அடுத்த பதிவை பார்க்க ஆவல்...
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்...
நன்றி...
(த.ம. 4)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
அடச்சே....
இப்படியும் ஒரு பல்பு கிடைக்குமா?
நம்ம பாசித் பதிவு என்பதால், புதுசா வந்திருக்கும் ஏதோ கூகிள் பேயைப் (Google Pay) பற்றி சொல்லப் போறீங்க என்று வந்தால்ல்...
இதைப் பத்தி ஏற்கனவே பேஸ்புக்கில் பார்த்திருக்கேன்..
அடுத்த நம்பாதீங்க பதிவு போடுவதற்குள், நீங்க சோலியை முடிச்சுட்டீங்க!!
//வேறொரு நல்ல பிளாக்கிற்கு சென்று விடுங்கள்.//
அதையும் நீங்களே சொல்லிடுங்களேன் :D
Post a Comment