இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...
ஓ.. இது தொலைக்காட்சி இல்லைல... சரி, வேற மாதிரி சொல்லலாம்...
எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக...
ச்சே... இது நால்லா இல்லையே! வேற எப்படி சொல்றது?
பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக....
பில்டப் ஓவரா இருக்குதோ?
சரி நேரடியா விசயத்திற்கு வரேன்..
Ideas of Harry Potter தளத்தின் ஓனர் ஹாரிபாட்டர் (டப்புடு இன் தமிழ்) அவர்கள் தொடர்-கதை ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அவர் எழுதியிருப்பது தொடர்கதை அல்ல, தொடர்-கதை.
அதாவது பதிவர்கள் அதிகம் பேர் இணைந்து எழுதும் தொடர்+கதை.
ரஜினி முதல்வரானால் - யுத்தம் ஆரம்பம் என்று கதையை ஹாரிபாட்டர் அவர்கள் தொடங்கியுள்ளார். அதனை வேறொரு பதிவர் தொடர்வார். அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு அதனை வேறொருவர் தொடர்வார். பிறகு... சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க.. இப்ப புரியுதா? இல்லைன்னா, இந்த பத்தியை திரும்பவும் படிங்க.
இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மெகா சீரியல் மாதிரி எழுதி உங்களை கொல்ல போறோம். இதில் மகிழ்ச்சியான, உற்சாகமான, பிரமிப்பான, பெருமைக்குரிய... (இப்படி இன்னும் நெறையா இருக்கு, சட்டுன்னு நினைவுக்கு வரல) செய்தி என்னவென்றால், மூன்றாவதாக உங்களைக் கொல்ல போவது "ப்ளாக்கர் நண்பன்" ஆகிய நான் தானுங்கோ!
பயப்படாதீங்க, ப்ளாக்கர் நண்பன் தளத்துல எழுத மாட்டேன். இதே ப்ளாக்கில் தான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடம்பெறப் போகிறது.
நீங்களும் கதை எழுதிக் கொல்லலாம். அதற்கான விபரங்கள்,
எழுதுபவர்களுக்கான விபரங்கள் / அறிவுறுத்தல்கள்
1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.
2. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)
3. கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள் வைக்கலாம்..
4. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்..
மேலும் விபரங்களுக்கு உலக வரலாற்றில் முதல் முறையாக.... பதிவை பாருங்கள்.
இதில் என்னைப் போன்று கதை எழுத தெரியாதவர்களும் கலந்துக் கொள்கிறார்கள், சிறப்பான கதைகளை எழுதிவரும் பதிவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
முதல் கதையினைப் படித்து உங்கள் விருப்பத்தினை ஹாரிபாட்டர் தளத்தில் தெரிவிக்கலாம்.
டிஸ்கி: உங்களைக் கொல்லப் போறோம் என்று சொன்னதன் அர்த்தம், உங்களை ரசிக்க வைத்து, சிரிக்க வைத்து உங்கள் சோகங்களை (கொஞ்ச நேரமாவது) கொல்லப் போகிறோம் என்று அர்த்தமாகும்.
Tweet | |||
15 comments:
படிச்சுட்டு ஐயோ கொல்றாங்க கொல்றாங்கன்னு சவுண்ட் உடனுமோ? ;-)
<<<
பயப்படாதீங்க, ப்ளாக்கர் நண்பன் தளத்துல எழுத மாட்டேன். இதே ப்ளாக்கில் தான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடம்பெறப் போகிறது
>>>
நல்ல வேலை 600-த்தி சொச்சம் பேரு பொழைச்சாங்க! எக்கு தப்பா முடிவெடுத்திருந்தீங்கன்னா என்ன ஆகிருக்கும் :D
>>>
Prabu Krishna said...
படிச்சுட்டு ஐயோ கொல்றாங்க கொல்றாங்கன்னு சவுண்ட் உடனுமோ? ;-)
>>>
உயிரோட இருந்தாத்தானே சவுண்டு வுடுவீங்க :D
ஆனாலும் பாசித் பாய் ரொம்ப நல்லாத்தான் மொக்கை போடுறாரு! :)
இந்த தொடர் கதையை படிச்சுட்டு இனிமே ப்ளாக் எழுத வரவங்க யாராயிந்தாலும் பயந்து ஓடனும்., இப்போ எழுதிகிட்டு இருக்குரவங்களும் தலைமறைவாகிரனும் அப்போத்தான் நாம தமிழ்மணத்துல முதல் இடத்துக்கு வர முடியும் பாஸ் அதை மரந்துராதீங்க :D
நன்றி நண்பா..
அழகான Promoting நம்ம கதைக்கு
//நல்ல வேலை 600-த்தி சொச்சம் பேரு பொழைச்சாங்க! எக்கு தப்பா முடிவெடுத்திருந்தீங்கன்னா என்ன ஆகிருக்கும் :D //
ஹி ஹி வரலாறு ஏங்க அவரு கதை போட்டியில எல்லாம் ரெண்டாம் பரிசு வாங்கி இருக்காருங்க..
//நாம தமிழ்மணத்துல முதல் இடத்துக்கு வர முடியும் பாஸ் அதை மரந்துராதீங்க :D //
ஏன் பாஸ் 70 ஆவது இடம் போதாதோ
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே
இணைந்து யுத்தம் செய்வோம் வாருங்கள்
ஹாரி பாட்டர் said...
//நல்ல வேலை 600-த்தி சொச்சம் பேரு பொழைச்சாங்க! எக்கு தப்பா முடிவெடுத்திருந்தீங்கன்னா என்ன ஆகிருக்கும் :D
//
....ஹி ஹி வரலாறு ஏங்க அவரு கதை போட்டியில எல்லாம் ரெண்டாம் பரிசு வாங்கி இருக்காருங்க..
///
உண்மையை சொல்லுங்க போட்டியில கலந்துகிட்டது ரெண்டே ரெண்டு பேரு தானே? :D
ஹாரி பாட்டர் said...
//நாம தமிழ்மணத்துல முதல் இடத்துக்கு வர முடியும் பாஸ் அதை மரந்துராதீங்க :D
//
ஏன் பாஸ் 70 ஆவது இடம் போதாதோ
//
நீங்க சொல்லுறது போன வாரம்! இந்த வாரம் எங்கே இருக்கேன்னு நீங்களே போய் பாத்துக்குங்க :)
கதையை படிச்சு முடிச்சுட்டு எல்லாரும் மரியாதையா சிரிச்சரனும்! சிரிப்பு வல்லைன்னு சொல்லி யாராவது சிரிக்காம இருந்தீங்க...அப்புறம் மறுபடியும் இதே மாதிரி பதிவு எழுதிருவோம் :D
நான் சிரிச்சுட்டேன்.. நான் சிரிச்சுட்டேன்...நான் சிரிச்சுட்டேன்.......! ஹா...ஹா...............
ஆங்.. அந்த பயம் இருக்கணும்!
Post a Comment