பேஸ்புக் பார்த்ததால் தோள்பட்டையில் அடி

10 Jul 2012

அமெரிக்காவின் சான் டீகோவில் (San Diego) கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்பால் (Baseball) போட்டி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் தனது மொபைலில் பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

பேஸ்புக் மொபைலில் Check-In என்றொரு வசதி இருக்கிறது. அதன் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு தெரியப்படுத்தலாம். அந்த ரசிகரும் தாம் பேஸ்பால் போட்டியை காண வந்திருப்பதாக சொல்வதற்கு check-In வசதியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த பந்து அவரின் தோள்பட்டையை பதம் பார்த்தது. கீழிருக்கும் வீடியோவை பாருங்கள்.



ஆனாலும் அவருக்கு செம சிரிப்பு. பின்னே இருக்காதா? அடி வாங்கி பிரபலம் ஆகிவிட்டாரே!

இது போன்ற மேலும் பயனுள்ள தகவல்களை பிறகு பார்க்கலாம்.

3 comments:

Prabu Krishna said...

எப்படி எல்லாம் பிரபலம் ஆகறாய்ங்க. அடியே வாங்காம எதுனா வழி இருந்தா சொல்லுங்க ;-)

MARI The Great said...

ஹி ஹி ஹி!

MARI The Great said...

<<<
Prabu Krishna said...
எப்படி எல்லாம் பிரபலம் ஆகறாய்ங்க. அடியே வாங்காம எதுனா வழி இருந்தா சொல்லுங்க ;-)
>>>

உங்களுக்காகவே ஒருத்தர் கடையை திறந்துவச்சிகிட்டு காத்திருக்கார்! கடை பேரு "மெய் மெய்யப்பன்" அவரை போய் பாருங்க!