வானம் தன்னுடைய கருநிற ஆடையை முழுவதுமாக போர்த்திக் கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தெருவில் இரண்டு, மூன்று வீடுகள் மட்டும் தூரம் தூரமாய் இருந்தது. வெளிச்சம் தரக்கூடிய தெருவிளக்குகளோ ஒரு சில அரசியல்வாதிகளின் வாழ்வை பிரகாசமாக்க சென்றுவிட்டது. இருள் சூழ்ந்த அத்தெருவின் ஓரமாய் மஃப்டியில் நின்றுக்கொண்டிருந்தது இன்ஸ்பெக்டர் கோகுலின் கார்.
"என்னால இன்னும் நம்ப முடியலை வினோத்" மெல்லிய குரலில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்திடம் கூறினான் இன்ஸ்பெக்டர் கோகுல்.
"நம்புங்க சார்! காலைல பஸ்ஸ்டாண்ட்ல விஷ்ணு நாகாவோட ரொம்ப நேரமா பேசிட்டிருந்தான். அவன் எதுக்கு நாகாவோட பேசணும்?"
"கேஸ் விசயமா ஏதாவது கிடைக்கலாம்னு பேசியிருக்கலாம்ல" சந்தேகத்துடனேயே கேட்டான் கோகுல்.
"அப்படி இருந்தா இந்நேரம் உங்களுக்கு சொல்லியிருப்பானே சார்?"
''ஆனா....." கோகுல் ஏதோ சொல்ல வந்த போது அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த விஷ்ணு வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னுடைய பைக்கினை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
"சார்! இது தான் சரியான நேரம். வாங்க உள்ளே போகலாம்"
வினோத் மெதுவாக அந்த வீட்டிற்கு செல்ல கோகுல் அவனை பின்தொடர்ந்து சென்றான்.
தன் பாக்கெட்டில் வைத்திருந்த கள்ளச்சாவிகளில் ஒன்றை தேர்வு செய்து கதவினை திறந்தான் வினோத். கதவு உடனே திறந்தது. இருவரும் உள்ளே சென்றனர்.
இருவரும் ஆளுக்கொரு பக்கம் ஏதாவது க்ளு கிடைக்குமா? என்று தேடினார்கள். சிறிது நேரத்தில்,
"சார்! இந்த பேப்பர் அந்த ரூம்ல இருந்தது, இதை பாருங்க"
வினோத் கொடுத்த பேப்பரில் எழுதியிருந்ததை பார்த்த கோகுலுக்கு அதிர்ச்சி.
"சார்! நான் முன்னாடியே சொன்னேன்ல. விஷ்ணு நம்மகிட்ட டபுல்கேம் ஆடுறான். அவனுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கு. விஷ்ணு வர்றதுக்குள்ள நாம போய்டுவோம். காலைல பார்த்துக்கலாம்."
சொன்ன வினோத் வெளியே சென்றான். அவனை பின்தொடர்ந்த கோகுல் கண்ணிற்கு ஒரு பொருள் கண்ணுக்குத் தட்டுப்பட அதனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
"சார்! என்னை மார்கெட்ல விட்டுடுங்க. கொஞ்சம் காய்கறிகள் வாங்கணும்"
வினோத்தை மார்கெட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றான் கோகுல்.
********************************************************************
விஷ்ணு வீட்டில் கிடைத்த பேப்பரில் எழுதியிருந்த இரண்டு வாசகங்களையும் தனியாக கிழித்து அதனையே பார்த்துக் கொண்டிருந்தான் கோகுல்.
ஏன் விஷ்ணு இப்படி செய்யணும்? இன்னொரு தகவல் யாருக்கு? ஒருவேளை வினோத் சொன்னது போல இவனுக்கும் அந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்குமோ? இப்படி பல யோசனையில் இருந்தபோது விஷ்ணு நம்பரிலிருந்து போன் வந்தது.
"ஹலோ!"
"..............."
"நீ இப்ப எங்க இருக்க?"
''..............."
"சரி! அவங்க கண்ணில் படாம பாதுகாப்பா இரு! இப்ப வந்துடுறேன்"
போனை கட் செய்த கோகுல் அவசரமாக கிளம்பிச் சென்றான்.
********************************************************************
மறுநாள் காலை. காவல் நிலையத்தில் நுழைந்த இன்ஸ்பெக்டர் கோகுல்,
"வினோத்! என் டேபிளுக்கு வாங்க!"
கோகுல் தனது இருக்கையில் உட்கார்ந்ததும் வினோத் உள்ளே வந்தான்.
"என்ன விஷயம் சார்!"
"அதை நீங்க தான் சொல்லணும்"
"புரியல சார்!"
"நடிக்காதீங்க வினோத்! எனக்கு எல்லா உண்மையும் தெரியும். விஷ்ணு சாகுறதுக்கு முன்னால எனக்கு போன்ல எல்லாத்தையும் சொல்லிட்டான்"
வினோத்துக்கு உடனே வியர்த்து ஊற்றியது. கர்ச்சீப்பால் அதனை துடைத்துக் கொண்டே,
"என்ன சொன்னான் சார்?"
"நீங்க என்ன செஞ்சீங்களோ அதை சொன்னான்"
"நம்மல ஏமாத்துறதுக்காக ஏதாச்சும் தப்பா சொல்லியிருப்பான் சார்! அவனும் இந்த கடத்தலுக்கு உடந்தை. நேத்துக் கூட நாகா கூட..."
"போதும் நிறுத்துங்க சார்! உங்க கதையை கேட்க எனக்கு நேரமில்லை. நாகா ஊர்லயே இல்லை. நீங்களே உண்மையை சொல்ல போறீங்களா, இல்ல மத்தவங்களை விசாரிக்குற மாதிரி விசாரிக்கவா?" சற்று கோபமாகவே பேசினான் கோகுல்.
அதிர்ந்து போன வினோத் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உண்மையை சொல்ல தொடங்கினான்.
"சார்! ஒரு மாசத்துக்கு முன்னாடி எம்எல்ஏ வோட ஆள் ஒருத்தன் என்னை பார்க்க வந்தான். அவங்க செய்யுற போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு நீங்க தடையா இருக்கீங்கன்னு சொன்னான். அடுத்ததா ஒரு கடத்தல் நடத்தப் போவதாகவும், அதற்கு உதவி செஞ்சா ஐம்பது லட்சம் எனக்கு தரேன்னும் சொன்னான். முதலில் நான் அதுக்கு சம்மதிக்கல. ஆனா என் பையன் அமெரிக்கா போய் படிக்கணும்னு ஆசைபடுறான். அதுக்காக வேற வழி இல்லாம சம்மதிச்சேன்.
இதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட விஷ்ணு, இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல போவதாகவும், அப்படி சொல்லாம இருக்கணும்னா அவனுக்கு இருபத்தைந்து லட்சம் கொடுக்கணும்னு சொன்னான். எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல. அப்படி பணம் கொடுத்தாலும் மறுபடியும் தொல்லை பண்ணுவான்னு தெரியும். அதனால அவனை எம்எல்ஏ ஆளுங்க மூலமாவே சாகடிச்சிடலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி விஷ்ணு மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கையை உடைக்கனும்னு, நேத்து காலையிலேயே அவன் இல்லாத நேரமா பார்த்து அவங்க வீட்டுக்கு போய் அந்த பேப்பரை கட்டிலுக்கு அடியில வச்சிட்டு வந்துட்டேன். நேத்து நைட் நம்ம வைட் பண்ணுன அதே நேரம் தெரு கடைசியில எம்எல்ஏ ஆளுங்க விஷ்ணுவை கொலை பண்றதுக்காக வைட் பண்ணுனாங்க. நேத்து மார்கெட்ல இறங்கி அவங்களுக்கு தான் போன் பண்ணினேன். விஷ்ணு இறந்துட்டதா சொன்னாங்க. ஆனா..."
மீண்டும் அமைதியானான் வினோத்.
"உண்மையை ஒத்துகிட்டதுக்கு தேங்க்ஸ் வினோத்! விஷ்ணு என்கிட்டே எதையும் சொல்லலை. அவன் போன் செஞ்ச பிறகு அவனை பார்க்கப் போறதுக்குள்ள அவன் இறந்துட்டான். எனக்கு உங்க மேல சந்தேகம் வர நிறைய காரணம் இருந்துச்சு.
நீங்க கள்ளச்சாவியில விஷ்ணு வீட்டை திறந்த போது முதல் சாவியிலேயே கதவு திறந்திடுச்சு. அது எப்படி கரெக்டா திறந்தீங்க? அதுக்கூட யதார்த்தமா நடந்ததா வச்சிக்கலாம்.
ஆனா விஷ்ணு மேல சந்தேகம் வரணும்னு பேப்பர்ல டைப் அடிச்சு வச்சீங்களே, அங்க தான் தப்பு பண்ணிட்டீங்க. விஷ்ணு எப்பவுமே அப்படி தகவல் சொல்ல மாட்டான். என்னோட பெர்சனல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவான், இல்லைன்னா எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஈமெயிலுக்கு அனுப்புவான். அதனால வேற யாரோ தான் இப்படி செஞ்சிருக்கனும்னு சந்தேகம் வந்துச்சு.
இதை எல்லாத்தையும் விட விஷ்ணு வீட்டுல எனக்கு கிடைச்ச தடயம் இதுக்கு காரணம் நீங்க தான் என்று காட்டி கொடுத்துச்சு."
தன் மேஜையில் இருந்த கவரிலிருந்து சில போட்டோக்களை எடுத்துக் காட்டினான். அது வினோத்தும், எம்எல்ஏ ஆளும் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
"வீட்டுக்கு போய் பேப்பரை வச்ச நீங்க இதை ஏன் தேடலை சார்?" கோகுல் கேட்டான்.
"போட்டோ எடுத்தது எனக்கு தெரியாது சார்! அதை பத்தி அவன் சொல்லலை." தலை குனிந்தபடி நின்றான் வினோத்.
"501! அந்த எஃப்.ஐ.ஆர் புக்கை எடுத்துட்டு வாங்க!" குரல் கொடுத்தான் இன்ஸ்பெக்டர் கோகுல்.

நண்பர்களே! சகோதரிகளே!
சவால் சிறுகதை போட்டிக்காக இதனை எழுதியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுக்களை போட்டுவிட்டு, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பிடிக்கவில்லையெனில் ஓட்டு போடாமல் பின்னூட்டத்தில் "கொட்டு" போடவும்.
குறிப்பு: யுடான்ஸ் திரட்டியில் தங்களுக்கு கணக்கு இல்லையெனினும் அதில் ஓட்டு போடலாம்.
சவால் சிறுகதை பற்றிய விவரங்கள்: சவால் சிறுகதைப் போட்டி –2011
என்றும் நட்புடன்,
அப்துல் பாஸித்
"என்னால இன்னும் நம்ப முடியலை வினோத்" மெல்லிய குரலில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்திடம் கூறினான் இன்ஸ்பெக்டர் கோகுல்.
"நம்புங்க சார்! காலைல பஸ்ஸ்டாண்ட்ல விஷ்ணு நாகாவோட ரொம்ப நேரமா பேசிட்டிருந்தான். அவன் எதுக்கு நாகாவோட பேசணும்?"
"கேஸ் விசயமா ஏதாவது கிடைக்கலாம்னு பேசியிருக்கலாம்ல" சந்தேகத்துடனேயே கேட்டான் கோகுல்.
"அப்படி இருந்தா இந்நேரம் உங்களுக்கு சொல்லியிருப்பானே சார்?"
''ஆனா....." கோகுல் ஏதோ சொல்ல வந்த போது அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த விஷ்ணு வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னுடைய பைக்கினை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
"சார்! இது தான் சரியான நேரம். வாங்க உள்ளே போகலாம்"
வினோத் மெதுவாக அந்த வீட்டிற்கு செல்ல கோகுல் அவனை பின்தொடர்ந்து சென்றான்.
தன் பாக்கெட்டில் வைத்திருந்த கள்ளச்சாவிகளில் ஒன்றை தேர்வு செய்து கதவினை திறந்தான் வினோத். கதவு உடனே திறந்தது. இருவரும் உள்ளே சென்றனர்.
இருவரும் ஆளுக்கொரு பக்கம் ஏதாவது க்ளு கிடைக்குமா? என்று தேடினார்கள். சிறிது நேரத்தில்,
"சார்! இந்த பேப்பர் அந்த ரூம்ல இருந்தது, இதை பாருங்க"
வினோத் கொடுத்த பேப்பரில் எழுதியிருந்ததை பார்த்த கோகுலுக்கு அதிர்ச்சி.
"சார்! நான் முன்னாடியே சொன்னேன்ல. விஷ்ணு நம்மகிட்ட டபுல்கேம் ஆடுறான். அவனுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கு. விஷ்ணு வர்றதுக்குள்ள நாம போய்டுவோம். காலைல பார்த்துக்கலாம்."
சொன்ன வினோத் வெளியே சென்றான். அவனை பின்தொடர்ந்த கோகுல் கண்ணிற்கு ஒரு பொருள் கண்ணுக்குத் தட்டுப்பட அதனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
"சார்! என்னை மார்கெட்ல விட்டுடுங்க. கொஞ்சம் காய்கறிகள் வாங்கணும்"
வினோத்தை மார்கெட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றான் கோகுல்.
********************************************************************
விஷ்ணு வீட்டில் கிடைத்த பேப்பரில் எழுதியிருந்த இரண்டு வாசகங்களையும் தனியாக கிழித்து அதனையே பார்த்துக் கொண்டிருந்தான் கோகுல்.
Mr. கோகுல்,
S W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.
- விஷ்ணு
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்.
-விஷ்ணுஏன் விஷ்ணு இப்படி செய்யணும்? இன்னொரு தகவல் யாருக்கு? ஒருவேளை வினோத் சொன்னது போல இவனுக்கும் அந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்குமோ? இப்படி பல யோசனையில் இருந்தபோது விஷ்ணு நம்பரிலிருந்து போன் வந்தது.
"ஹலோ!"
"..............."
"நீ இப்ப எங்க இருக்க?"
''..............."
"சரி! அவங்க கண்ணில் படாம பாதுகாப்பா இரு! இப்ப வந்துடுறேன்"
போனை கட் செய்த கோகுல் அவசரமாக கிளம்பிச் சென்றான்.
********************************************************************
மறுநாள் காலை. காவல் நிலையத்தில் நுழைந்த இன்ஸ்பெக்டர் கோகுல்,
"வினோத்! என் டேபிளுக்கு வாங்க!"
கோகுல் தனது இருக்கையில் உட்கார்ந்ததும் வினோத் உள்ளே வந்தான்.
"என்ன விஷயம் சார்!"
"அதை நீங்க தான் சொல்லணும்"
"புரியல சார்!"
"நடிக்காதீங்க வினோத்! எனக்கு எல்லா உண்மையும் தெரியும். விஷ்ணு சாகுறதுக்கு முன்னால எனக்கு போன்ல எல்லாத்தையும் சொல்லிட்டான்"
வினோத்துக்கு உடனே வியர்த்து ஊற்றியது. கர்ச்சீப்பால் அதனை துடைத்துக் கொண்டே,
"என்ன சொன்னான் சார்?"
"நீங்க என்ன செஞ்சீங்களோ அதை சொன்னான்"
"நம்மல ஏமாத்துறதுக்காக ஏதாச்சும் தப்பா சொல்லியிருப்பான் சார்! அவனும் இந்த கடத்தலுக்கு உடந்தை. நேத்துக் கூட நாகா கூட..."
"போதும் நிறுத்துங்க சார்! உங்க கதையை கேட்க எனக்கு நேரமில்லை. நாகா ஊர்லயே இல்லை. நீங்களே உண்மையை சொல்ல போறீங்களா, இல்ல மத்தவங்களை விசாரிக்குற மாதிரி விசாரிக்கவா?" சற்று கோபமாகவே பேசினான் கோகுல்.
அதிர்ந்து போன வினோத் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உண்மையை சொல்ல தொடங்கினான்.
"சார்! ஒரு மாசத்துக்கு முன்னாடி எம்எல்ஏ வோட ஆள் ஒருத்தன் என்னை பார்க்க வந்தான். அவங்க செய்யுற போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு நீங்க தடையா இருக்கீங்கன்னு சொன்னான். அடுத்ததா ஒரு கடத்தல் நடத்தப் போவதாகவும், அதற்கு உதவி செஞ்சா ஐம்பது லட்சம் எனக்கு தரேன்னும் சொன்னான். முதலில் நான் அதுக்கு சம்மதிக்கல. ஆனா என் பையன் அமெரிக்கா போய் படிக்கணும்னு ஆசைபடுறான். அதுக்காக வேற வழி இல்லாம சம்மதிச்சேன்.
இதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட விஷ்ணு, இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல போவதாகவும், அப்படி சொல்லாம இருக்கணும்னா அவனுக்கு இருபத்தைந்து லட்சம் கொடுக்கணும்னு சொன்னான். எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல. அப்படி பணம் கொடுத்தாலும் மறுபடியும் தொல்லை பண்ணுவான்னு தெரியும். அதனால அவனை எம்எல்ஏ ஆளுங்க மூலமாவே சாகடிச்சிடலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி விஷ்ணு மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கையை உடைக்கனும்னு, நேத்து காலையிலேயே அவன் இல்லாத நேரமா பார்த்து அவங்க வீட்டுக்கு போய் அந்த பேப்பரை கட்டிலுக்கு அடியில வச்சிட்டு வந்துட்டேன். நேத்து நைட் நம்ம வைட் பண்ணுன அதே நேரம் தெரு கடைசியில எம்எல்ஏ ஆளுங்க விஷ்ணுவை கொலை பண்றதுக்காக வைட் பண்ணுனாங்க. நேத்து மார்கெட்ல இறங்கி அவங்களுக்கு தான் போன் பண்ணினேன். விஷ்ணு இறந்துட்டதா சொன்னாங்க. ஆனா..."
மீண்டும் அமைதியானான் வினோத்.
"உண்மையை ஒத்துகிட்டதுக்கு தேங்க்ஸ் வினோத்! விஷ்ணு என்கிட்டே எதையும் சொல்லலை. அவன் போன் செஞ்ச பிறகு அவனை பார்க்கப் போறதுக்குள்ள அவன் இறந்துட்டான். எனக்கு உங்க மேல சந்தேகம் வர நிறைய காரணம் இருந்துச்சு.
நீங்க கள்ளச்சாவியில விஷ்ணு வீட்டை திறந்த போது முதல் சாவியிலேயே கதவு திறந்திடுச்சு. அது எப்படி கரெக்டா திறந்தீங்க? அதுக்கூட யதார்த்தமா நடந்ததா வச்சிக்கலாம்.
ஆனா விஷ்ணு மேல சந்தேகம் வரணும்னு பேப்பர்ல டைப் அடிச்சு வச்சீங்களே, அங்க தான் தப்பு பண்ணிட்டீங்க. விஷ்ணு எப்பவுமே அப்படி தகவல் சொல்ல மாட்டான். என்னோட பெர்சனல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவான், இல்லைன்னா எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஈமெயிலுக்கு அனுப்புவான். அதனால வேற யாரோ தான் இப்படி செஞ்சிருக்கனும்னு சந்தேகம் வந்துச்சு.
இதை எல்லாத்தையும் விட விஷ்ணு வீட்டுல எனக்கு கிடைச்ச தடயம் இதுக்கு காரணம் நீங்க தான் என்று காட்டி கொடுத்துச்சு."
தன் மேஜையில் இருந்த கவரிலிருந்து சில போட்டோக்களை எடுத்துக் காட்டினான். அது வினோத்தும், எம்எல்ஏ ஆளும் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
"வீட்டுக்கு போய் பேப்பரை வச்ச நீங்க இதை ஏன் தேடலை சார்?" கோகுல் கேட்டான்.
"போட்டோ எடுத்தது எனக்கு தெரியாது சார்! அதை பத்தி அவன் சொல்லலை." தலை குனிந்தபடி நின்றான் வினோத்.
"501! அந்த எஃப்.ஐ.ஆர் புக்கை எடுத்துட்டு வாங்க!" குரல் கொடுத்தான் இன்ஸ்பெக்டர் கோகுல்.
********************************************************************
நண்பர்களே! சகோதரிகளே!
சவால் சிறுகதை போட்டிக்காக இதனை எழுதியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுக்களை போட்டுவிட்டு, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பிடிக்கவில்லையெனில் ஓட்டு போடாமல் பின்னூட்டத்தில் "கொட்டு" போடவும்.
குறிப்பு: யுடான்ஸ் திரட்டியில் தங்களுக்கு கணக்கு இல்லையெனினும் அதில் ஓட்டு போடலாம்.
சவால் சிறுகதை பற்றிய விவரங்கள்: சவால் சிறுகதைப் போட்டி –2011
என்றும் நட்புடன்,
அப்துல் பாஸித்
Tweet | |||
21 comments:
//நீங்க கள்ளச்சாவியில விஷ்ணு வீட்டை திறந்த போது முதல் சாவியிலேயே கதவு திறந்திடுச்சு.//
நல்ல க்ளூ...... நானும் அத தான் நெனச்சேன்... எப்படி கள்ள சாவி சரியா வினோத் கைல இருந்துச்சுன்னு
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ ...
எங்கும் தடங்கலின்றி விறுவிறுப்பாகச் சென்றது கதை. வாழ்த்துக்கள்.
//பிடிக்கவில்லையெனில் ஓட்டு போடாமல் பின்னூட்டத்தில் "கொட்டு" போடவும்.//
இது தான் சகோ உங்க கிட்ட எனக்கு பிடிச்சது...
ஓட்டு போட வேணாம் என சொல்வதற்கே மனசு வேணும்
வாழ்த்துக்கள்
கதை வெற்றி பெற என்னாளும் என் வாழ்த்துக்கள்
nice story friend.
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்
நானும் கதை எழுதி உள்ளேன் அதையும் பாருங்கள். (போட்டிக்கு போகும் அளவுக்கு இல்லை ஹி ஹி)
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்//
//ஆமினா said...
//நீங்க கள்ளச்சாவியில விஷ்ணு வீட்டை திறந்த போது முதல் சாவியிலேயே கதவு திறந்திடுச்சு.//
நல்ல க்ளூ...... நானும் அத தான் நெனச்சேன்... எப்படி கள்ள சாவி சரியா வினோத் கைல இருந்துச்சுன்னு
//
:) :) :)
////பிடிக்கவில்லையெனில் ஓட்டு போடாமல் பின்னூட்டத்தில் "கொட்டு" போடவும்.//
இது தான் சகோ உங்க கிட்ட எனக்கு பிடிச்சது...
ஓட்டு போட வேணாம் என சொல்வதற்கே மனசு வேணும்
வாழ்த்துக்கள்
கதை வெற்றி பெற என்னாளும் என் வாழ்த்துக்கள் //
நன்றி சகோ.!
//stalin said...
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ ...
//
நன்றி சகோ.!
//கணேஷ் said...
எங்கும் தடங்கலின்றி விறுவிறுப்பாகச் சென்றது கதை. வாழ்த்துக்கள்.
//
நன்றி நண்பா!
//Jayachandran said...
nice story friend.
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருக்கலாம்
//
நன்றி நண்பா! எனக்கு அப்படி தான் தோன்றுகிறது.
:) :) :)
//tamilkizham said...
நானும் கதை எழுதி உள்ளேன் அதையும் பாருங்கள். (போட்டிக்கு போகும் அளவுக்கு இல்லை ஹி ஹி)
//
பார்க்கிறேன் நண்பா!
//Minmalar said...
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்
//
நன்றி நண்பா!
//zalha said...
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்//
//
நன்றி சகோ.!
நண்பா.. கதை ராஜேஷ்குமார் ரேஞ்சுக்கு கலக்கிருக்கீங்க
உங்கள் கதை கண்டிப்பாக செலக்ட் ஆகும் நண்பா... கதை நகர்த்திய நடையே மிக அழகாக இருக்கிறது.. சூப்பர்..
விஷ்ணு எப்பவுமே அப்படி தகவல் சொல்ல மாட்டான். என்னோட பெர்சனல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவான், இல்லைன்னா எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஈமெயிலுக்கு அனுப்புவான். //
அருமையான காரணத்தை வைத்து அசத்திவிட்டீர்கள்... வாழ்த்துக்கள் நண்பா
அருமையான க்ரைம் கதை ,படித்தேன்,பிடித்துள்ளது நண்பா
நல்லா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்
உங்களுக்கு கதையெல்லாம் கூட நல்லா வரும் போல் இருக்கே!
நல்ல முயற்சி! சுவாரசியமாக சென்றது கதை! ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்!
Post a Comment