வத்த குழம்பு செய்வது எப்படி?

28 Feb 2014


வத்த குழம்பு என்று சொன்னாலே பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். அத்தகைய சுவைமிகுந்த வத்த குழம்பு செய்வது எப்படி? என்று டீக்கடை உரிமையாளர் விளக்குவதைப் பார்ப்போம்.

தேவையான நேரம்:
தயாராகும் நேரம்:
சமைக்கும் நேரம்:
மொத்த நேரம்:

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 150 கிராம்
தக்காளி - இரண்டு
புளி - பெரிய எலுமிச்சை சைஸ்
நல்லெண்ணெய் - 50-100 மில்லி
கருவேப்பிலை - 2
சுண்டவத்தல் - 15
சாம்பார் மசாலா - 3-4 கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழதாக உரித்து வைத்து கொள்ளவும்... தக்காளீயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்... புளியை நன்றாக கரைத்து ரொம்ப தண்ணி ஆகாம வைத்துக்கொள்ளவும்.. கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்..

இப்பொழுது சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்... கொதித்த பின் அதில் சுண்டவத்தலை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.. அதன் பின் பூண்டையும் அதில் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்(அப்ப தான் பூண்டு வாடை போகும்).

அதன் பின், அந்த எண்ணெயில் சிறிது சோம்பு, சிறிது வெந்தயம், சிறிது சீரகம் போட்டு வதக்கவும்... அதன் பின் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்... அதன் பின் அதில் ஏற்கனவே வதக்கி வைத்த பூண்டு மற்றும் வத்தலை போட்டு வதக்கவும்... 2 நிமிடங்கள் கழித்து தக்காளியை அதில் போட்டு நன்றாக வதக்கவும்...
அதில் 4 கரண்டி சாம்பார் மசாலா போட்டு நன்றாக கிளறவும்... மறக்காமல் தேவையான அளவு உப்பை போடவும்....

மசாலா நன்றாக சார்ந்ததும், அதில் புளிக்கரைசலை ஊற்றி.. மூடி வைத்து கொதிக்க விடவும்... சிறிது நேரத்தில் எண்ணெய் மேலேறி வரும்.. அவ்வாறு வந்ததும் அடுப்பை அணைத்து, அதன் மேல் பொடி செய்த கருவேப்பிலையை தூவி இறக்கி விடவும்...

சுவையான மணமணக்கும் வத்த குழம்பு தயார்....!

10 comments:

சிராஜ் said...

பாசித்....

ஏன் தம்பி இப்படி போஸ்ட் போட்டு மானத்த வாங்குற??? ஹா.. ஹா...

திண்டுக்கல் தனபாலன் said...

அட...!

Maha said...

தண்ணீர் சேர்க்காமல் எப்படி மசாலா சேரும்.

Jaleela Banu said...

அட வீட்டில் சிராஜ் தம்பி சமையல் தானா?

ahlen said...

சமையல் குறிப்பு..... பலே ..பலே (Y) ஜஸாக்கல்லாஹ் ..
(நன்றி)

taha sofiya said...
This comment has been removed by the author.
taha sofiya said...

வாழ்துக்கள் சிராஜ் அண்ணே! சாப்ட்வேர் இன்ஜினயரும் - சமையல் இன்ஜினியரும் :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சமையல் குறிப்பு.

சோம்பு சேர்க்காமலும் செய்யலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

v.s.panneerselvam said...

புளிக்கரைசலை சேர்க்காமல் சாம்பார் பொடியை சேர்த்து வதக்கினால் சாம்பார் பொடியில் உள்ளபருப்பு வாசம் போய் விடும் . அதனால் குழம்பு கொதித்து இறக்கும் வேளையில் சாம்பார் பொடியை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும் குழம்பு மணக்கும்