டீ போடுவது எப்படி?

27 Dec 2013


பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு "பிரபல" "பிரபல" பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல்களில் ஒன்றை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை டீ குடித்த சில நிமிடங்களில் எழுதத் துவங்குகிறேன்.

டீ போடுவது எப்படி?

சுவையான டீயை மிக எளிதாக நீங்களே செய்வதற்கான வழிமுறைகள்.

பொதுவாக டீ போடுவதில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை, வேறு யாராவது செய்திருந்த டீயை வாங்கி கீழே போடுவது.

ஆனால் நாம் பார்க்க விருப்பது இரண்டாவது வகை.

தேவையான பொருட்கள்:

1. டீ தூள்
2. பால் அல்லது பால் பவுடர்.
3. சீனி

செய்முறை:
  1. பாத்திரத்தில் தேவையான அளவு பால் அல்லது தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.
  2. லேசாக தண்ணீர்/பால் கொதிக்கும் போது தேவையான அளவு டீ தூள் போடவும்.
  3. உங்களுக்கு லைட் டீ வேண்டுமா? ஸ்ட்ராங் டீ வேண்டுமா? என்பதைப் பொறுத்து கொதிக்க விட வேண்டும்.
  4. நல்ல கொதி வந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
  5. கப்பில் தேவையான அளவு சீனிபோட்டு வைத்துக் கொள்ளவும்.
  6. பால் இல்லாமல் தண்ணீரில் செய்தால் பால் பவுடர் தேவையான அளவு கப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
  7. சட்டியிலிருக்கும் டீயை வடித்தட்டு பயன்படுத்தி கப்பில் ஊற்றவும்.
  8. பிறகு சீனி, பால் பவுடர் கரைவதற்காக டீயை ஆற்றிக் கொள்ளவும்.
அவ்வளவு தான்! சுவையான அல்லது சுமாரான டீ தயார்! இந்த டீயை 5 நிமிடங்களிலேயே செய்து குடிக்கலாம். முதல் முறை டீயை நீங்களே செய்து குடித்தால் நட்சத்திர ஓட்டலில் குடிப்பது போலவே உணரலாம்.

தேடு இயந்திரத்திற்கான மேலதிகத் தகவல்கள்:

சமையல்:டீ போடுவது எப்படி?

சமையல் கலைஞர்:

சமையல் நாள்:

சமையல் குறிப்பு:டீ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுவையான தேநீரின் செய்முறை.

சுய மதிப்பாய்வு: 4.5 நட்சத்திரங்கள், 1509 பார்வைகள்

தயாராகும் நேரம்:

சமையல் நேரம்:

மொத்த நேரம்:

17 comments:

aavee said...

செம்ம.. தேவையில்லாத பொருட்கள் தான் புரியவில்லை.. சபீனா ப்ளீஸ்..

Admin said...

அதான் தேவையில்லை என்று சொல்லிட்டேனே? அப்புறம் என்ன பாஸ்?

விம்: http://goo.gl/i4pVhJ

:)

சீனு said...

ஹா ஹா ஹா யோவ் நீரும் ஆரம்பிபிச்சாச்சா... அட கடவுளே இது எங்க போய் முடியப் போகுதோ

rajamelaiyur said...

// பால் பவுடர்., , , பால் பவுடர்.//
ணு சொல்றிங்களே அது என்ன(திண்டுக்கல்) தனபால் பவுடரை விட மதிப்பானதா??

rajamelaiyur said...

// பிறகு சீனி, //

அவரை எதுக்கு கலக்கனும்???

rajamelaiyur said...

அடுத்து காப்பி போடுவது எப்படினு பதிவுபோடுங்க??

JR Benedict II said...

அவ்ளோ சீக்கிரமா முடிச்சுருவோமா???

சீனி. நாமதேவன் said...

பாசித் பால் கொதித்து வரும்போது எழும் நுரையை எடுத்துவிட்டால் டீ ரொம்ப ருசியாக இருக்கும். எனது மூன்று வருட அனுபவம்

rajamelaiyur said...

பாஸ் உங்க பாணியில் நான் போட்ட பதிவு ...


பாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்

Unknown said...

நல்லாக் கெளப்புறாய்ங்கடா பீதிய...

Jayadev Das said...

எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் அலையுராய்ங்க போலிக்கே!!

Unknown said...

உங்க டீ அருமை !
இதோ இன்று நான் போட்ட டீ>>>புருசங்காரனுக்கு பெண்டாட்'டீ'யைத் தவிர வேற வழியில்லை..http://jokkaali.blogspot.com/2013/12/blog-post_27.html.டேஸ்ட் பண்ணிப் பாருங்க !
த.ம +1

வெற்றிவேல் said...

டீல சீனிய போடக் கூப்பிட்டால் அவர் வருவாரா!!!!

Vijayan Durai said...

//முதல் வகை, வேறு யாராவது செய்திருந்த டீயை வாங்கி கீழே போடுவது. //
இரண்டாம் வகை டீ ! முதல் வகை ஆகாமல் தடுத்து விட்டீர்கள்!

Vijayan Durai said...

தேவையில்லாத பொருட்கள் !!! ஏன் பாஸ் இப்படி !!!! :)

வெங்கட் நாகராஜ் said...

அப்படித் தாக்குங்க! :)

எல்லாம் ஒரு மார்க்கமாத் தான் போயிட்டு இருக்கு!

cookbookjaleela said...

இது யார் போட்ட டீ?