விஸ்வரூபம் திரைப்படம் துபாய், அபுதாபி உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.இதை VOXCinemas அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Dear all, Vishwaroopam (Tamil) movie is banned in the UAE. Sorry for the disappointment.
— VOX Cinemas (@voxcinemas) January 23, 2013
விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சில பதிவுகள்:
விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது
கமல் Vs இஸ்லாம் :- விஸ்வரூபம் எடுக்கும் சதி!!!
விஸ்வரூபம் - முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?
Updated:
Kamal Haasan’s ambitious Tamil-language spy thriller Vishwaroopam will not release in the UAE on Thursday as scheduled. The film is still under review, an official at the National Media Council told tabloid!.
“We are yet to give our verdict on it. It touches upon sensitive subjects like Osama Bin Laden and Muslim groups. There are bombings and more killings. We need to review it very carefully,” said Juma Obaid Al Leem, director of the Media Content Tracking Department at the Council. His team is scheduled to review the film again on Sunday.
Update 2:
அடுத்த பதினைந்து நாட்களுக்கு விஸ்வரூபம் படம் திரையிடப்பட தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே தடையை நீக்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அறிவிப்பு.
Tweet | |||
10 comments:
ஏன்? என்ன கொடுமை சார் இது.
ஸ்வீட் எடேய்.... கொண்டாடேய்....!
குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.
குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அருமையான பதிவு சகோ பாஸித் கருத்தாழமிக்க இந்த எல்லோராலும் வரவேற்கப்படும்
ithellam oru polappu.
poi pulla kuttiya padikka vaiyunga
முதலில் படம் வரட்டும் பார்க்கலாம். எல்லாம் வெள்ளியன்று தெரிந்துவிடும்.
நல்லா கேட்டீங்க நண்பா! இது போல எத்தனை பேர் கேட்டாலும் கமல் திருந்துவாரா? என்று தெரியவில்லை...ஏனெனில் கமலுக்கு இதே பொழைப்பாகிவிட்டது...
மு.செ.மு. நெய்னா முஹம்மது
January 23, 2013 at 6:39 PM
(Source Adiraixpress)
நடிகர் கமலுக்கு தேவையில்லாத வேலை இது. நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில் தினம், தினம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து சங்கடப்பட்டு வருகிறோம்.
உதாரணத்திற்கு பருவ மழை பொய்த்துப்போனதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.
4 வயது சிறுமி முதல் 65 வயது கிழவி வரை ஆளாகும் பாலியல் பலாத்காரங்கள்.
அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் ஆதாரமாய் விளங்கும் காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுப்பிரச்சினை.
டீசல், பெட்ரோல், வீட்டு சமையல் எரிவாயுவின் மாதாந்திர விலை ஏற்றம்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நுழைவால் நம்நாட்டு சிறு,குறு வணிகர்களின் வேதனையும், வருத்தங்களும்.
நாட்டில் அண்மையில் ஆங்காங்கே நடந்த குண்டு வெடிப்பில் மதவாத சக்திகளின் அம்பலப்படுத்தப்பட்ட சதிச்செயல்கள்.
பெட்டிக்கடைகளை விட பெருகி வரும் அரசு (டாஸ்மாக்)மதுக்கடைகளால் நடக்கும் அன்றாட குற்றங்கள்.
அன்றாட வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றால் வீடு வந்து சேர்வோமோ? இல்லையோ? என இலங்கை கடற்படையின் அன்றாடம் அரங்கேறும் அட்டூழியங்களால் நிச்சயமற்றுப்போன நம் தமிழக மீனவர்களின் பரிதாப நிலை.
பொறுப்பற்ற அரசு எந்திரங்களால்/அதிகாரிகளால் அன்றாடம் அரங்கேறும் ஊழல், லஞ்ச லாவண்யம், அலட்சிய அதிகாரம் என வறுத்தெடுக்கப்படும் நாட்டு மக்கள்.
சாதித்தீயால் தென்மாவட்டங்களில் கருகி வரும் மனித நேயம். என இப்படி எவ்வளவோ அத்தியாவசிய பிரச்சினைகள் நம் தலைக்கு மேல் வெள்ளமென அன்றாடம் ஓடிக்கொண்டிருக்க உனக்கு ஏன்னய்யா இந்த வேண்டாத வேலை?
உன் மருமகன் மணி ரத்னம் போல் இப்படி ஒரு சிறுபாண்மை சமூகத்தை வேதனைப்படுத்தி அதில் எப்படித்தான் உனக்கு நாலு, காசு பணம் சம்பாதிக்க மனம் வருகிறதோ?
படத்தில் ஃபேக்ட்டைத்தானே சொல்கிறேன் என நீ விதண்டாவாதம் செய்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளெல்லாம் என்ன பக்கத்து பாக்கிஸ்தானின் பிரச்சினைகளா?
இப்படி ஓரிறையை மட்டும் வணங்கி தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் சமுதாயத்தின் மார்க்க அறிஞர்களைக்கூட தெருவுக்கு வந்து போராட வைத்து சங்கடப்படுத்துவதில் என்ன தான் உனக்கு சந்தோசமோ?
பரபரப்பாய் பேசப்படும் மக்களாலும், உற்சாகப்படுத்தும் ஊடகங்களாலும் கோடிகள் பல உன் காலடியில் வந்து விழும் என்ற மனிதநேயமற்ற உன் கொள்கையில் நீ பிடிவாதமாக இருந்தால் உனக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விருப்பம் "இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமாவை பற்றியோ அல்லது இஸ்ரேலின் உண்மை வரலாறு பற்றியோ உலகமே விமர்சித்து வியக்கும் வண்ணம் படம் எடுத்து பில்லியன் டாலர்கள் பார்க்க உமக்கு துணிவேதும் உண்டோ?
இதற்கு பரிகாரமாக அடுத்த படத்தில் முஸ்லிம் பெயரிட்டு நீ நடித்து விடுவதால் அநியாயமாய் வாங்கிய அடிகளும், அதனால் வரும் தளும்புகளும் வலியின்றி எளிதில் மறைந்து போகாது. சாபமிட்டே அது மரணிக்கும்.
Flash News :
http://dinamani.com/latest_news/article1432742.ece
'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'
By dn, சென்னை
First Published : 23 January 2013 08:39 PM IST
கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
http://sunmarkam.blogspot.com/2013/01/blog-post_24.html
Post a Comment