ஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்

24 Oct 2012

5 comments

மீண்டும் ஒரு பயனுள்ள தொழில்நுட்ப பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! வர வர கூகுளின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவே இல்லை. ஏன் கூகுள் இப்படி நடந்துக் கொள்கிறது?

வாழைப்பழம்

மாம்பழம்

திராட்சை

ஸ்ட்ராபெர்ரி

ஆனால், ஆப்பிளுக்கு...?

ஆப்பிள்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு  சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா?

20 Oct 2012

10 comments
வார முதல் நாள் என்பதால் போரடிக்கிறதே என்று கூகுளில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக இது என் கண்ணில் பட்டது. இதைக் கண்டதும் எனக்கு கூகுள் மேல் செம கோபம். அது எப்படி கூகுள் பாரபட்சமாக நடக்கலாம்?

சந்தானத்திற்கு உண்டு, வடிவேலுக்கு உண்டு, ஏன் சாம் ஆண்டர்சனுக்கும் உண்டு... ஆனால் பவர் ஸ்டாருக்கு இல்லையா?

சந்தானம்

சாம் ஆண்டர்சன்

வடிவேலு

ஆனால், பவர் ஸ்டாருக்கு....????

பவர் ஸ்டார்?

படத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph

என்ன  கொடுமை சார் இது?

எனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்

15 Oct 2012

17 comments
ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அனிமேசன் படங்கள் தான். கிட்டத்தட்ட இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களும் எனக்கு பிடித்துள்ளது. அதில் சிலவற்றை மற்றும் இங்கு பதிவிடுகிறேன். விரைவில் இவற்றில் சில படங்களின் விமர்சனங்கள் வெளிவரலாம்.

  1. How to train your dragon?
  2. Toy Story 1,2,3
  3. Kungfu Panda 1,2
  4. Shrek 1,2,3
  5. Monsters Inc
  6. The Incredibles
  7. Tangled
  8. Rio
  9. Ice Age 1,2,3
  10. Madagascar 1,2,3
  11. Despicable Me
  12. Up
  13. Finding Nemo
  14. Chicken Little
  15. Chicken Run
  16. Antz
  17. Bolt
  18. Rango (படம் ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தது,பிறகு பிடித்திருந்தது)
  19. Puss in Boots
  20. Ratatouille
  21. Hotel Transylvania
  22. The Smurfs
  23. Megamind
  24. Monsters vs Aliens
  25. Astro Boy
  26. Planet 51
  27. Cloudy with a Chance of Meatballs
  28. TMNT (Teen Mutant Ninja Turtles)
  29. Meet the Robinsons
  30. The Wild  

ஆ... இப்பவே கை கட்டுதே... மீதி பட்டியலை அடுத்த பதிவுல பார்க்கலாம்.

உங்களுக்கு  எந்தெந்த அனிமேசன் படங்கள் பிடிக்கும்?

Hotel Transylvania (2012) - திரை விமர்சனம்

13 Oct 2012

11 comments

ஹாலிவுட்டில் ரசிகர்களை பயமுறுத்திய Dracula, Frankenstein, The Mummy, The Invisible Man, Werewolves போன்ற திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் Hotel Transylvania என்னும் அனிமேசன் படத்தில் இணைந்துள்ளன. தனித்தனியாக வெளிவந்து ரசிகர்களை திகிலில் உறையச் செய்த அந்த கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்தால்....?

Hotel Transylvania (2012) கதை சுருக்கம்:

ட்ராகுலாவின் செல்ல மகள் மேவிஸ் வெளி உலகிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் ட்ராகுலா அதனை மறுக்கிறது. மனிதர்களால் தனது மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது ட்ராகுலா. அதே நேரம் டிராகுலா தனது செல்ல மகளின் 118-ஆவது பிறந்தநாளுக்காக ஃப்ரான்கெஸ்டைன், மம்மி, இன்விசிபில் மேன், ஓநாய் போன்ற உலகில் உள்ள அனைத்து பேய்களையும் தான் புதிதாக கட்டியிருக்கும் மனிதர்கள் நுழைய முடியாத ஹோட்டல் ட்ரான்சில்வேனியாவிற்கு அழைக்கிறது. பேய்கள் எல்லாம் கும்மாளமடிக்கும் போது உள்ளே நுழைகிறான் ஒரு மனிதன், ஜோனாதன். அவனை மற்றவர்களிடமிருந்து இவன் மனிதன் என்பதை மறைக்க ஜோனாதன் ஃப்ரான்கெஸ்டைனின் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) என்று அறிமுகப்படுத்துகிறது ட்ராகுலா. இதற்கிடையில் ஜோனாதனுக்கும், மேவிசுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இதனை தடுக்க டிராகுலா படும் பாட்டையும், ஜோனாதனின் அட்டகாசங்களையும் காட்டுகிறது மீதிக் காட்சிகள்.

ரசிக்க வைத்த காட்சிகள்:


நிஜ  நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது.


குட்டி ஓநாய்களின் அட்டகாசங்கள் ரசிக்க வைத்தது. அதுவும் கடைக்குட்டி பெண் ஓநாய்க்கு மற்ற குட்டிகள் பயப்படுவது நன்றாக இருந்தது.

பொதுவாக  ஓட்டல்களில் நாம் தூங்கும் போது வெளியே கதவில் "Do not Disturb" என்று அட்டையை தொங்கவிடுவோம் அல்லவா? அதே போல இந்த ஹோட்டலில் அட்டைக்கு பதிலாக ஒவ்வொரு கதவுகளிலும் சூனியக்காரியின் (Witch) தலைகள் தொங்கவிடப் பட்டிருக்கும். அந்த தலைகள் "Do not Disturb" என்று சொல்லும். ஆனால் மேவிஸ் இருக்கும் அறையில் உள்ள தலை மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கும். (ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை)

ஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....

ஹிஹிஹிஹி...இன்னும் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது. அவசியம் படத்தை பாருங்கள். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

Hotel Transylvania Trailer:



ரேட்டிங்: 4.7/5 நட்சத்திரங்கள்

டிஸ்கி: எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க... எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், அவ்வளவு தான்! அதுவுமில்லாமல், எனக்கு படத்துல நடிச்சவங்க, டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்றேன்,

"அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்." - அப்துல் பாஸித்