வத்த குழம்பு செய்வது எப்படி?

28 Feb 2014

8 comments

வத்த குழம்பு என்று சொன்னாலே பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். அத்தகைய சுவைமிகுந்த வத்த குழம்பு செய்வது எப்படி? என்று டீக்கடை உரிமையாளர் விளக்குவதைப் பார்ப்போம்.

தேவையான நேரம்:
தயாராகும் நேரம்:
சமைக்கும் நேரம்:
மொத்த நேரம்:

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 150 கிராம்
தக்காளி - இரண்டு
புளி - பெரிய எலுமிச்சை சைஸ்
நல்லெண்ணெய் - 50-100 மில்லி
கருவேப்பிலை - 2
சுண்டவத்தல் - 15
சாம்பார் மசாலா - 3-4 கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழதாக உரித்து வைத்து கொள்ளவும்... தக்காளீயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்... புளியை நன்றாக கரைத்து ரொம்ப தண்ணி ஆகாம வைத்துக்கொள்ளவும்.. கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்..

இப்பொழுது சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்... கொதித்த பின் அதில் சுண்டவத்தலை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.. அதன் பின் பூண்டையும் அதில் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்(அப்ப தான் பூண்டு வாடை போகும்).

அதன் பின், அந்த எண்ணெயில் சிறிது சோம்பு, சிறிது வெந்தயம், சிறிது சீரகம் போட்டு வதக்கவும்... அதன் பின் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்... அதன் பின் அதில் ஏற்கனவே வதக்கி வைத்த பூண்டு மற்றும் வத்தலை போட்டு வதக்கவும்... 2 நிமிடங்கள் கழித்து தக்காளியை அதில் போட்டு நன்றாக வதக்கவும்...
அதில் 4 கரண்டி சாம்பார் மசாலா போட்டு நன்றாக கிளறவும்... மறக்காமல் தேவையான அளவு உப்பை போடவும்....

மசாலா நன்றாக சார்ந்ததும், அதில் புளிக்கரைசலை ஊற்றி.. மூடி வைத்து கொதிக்க விடவும்... சிறிது நேரத்தில் எண்ணெய் மேலேறி வரும்.. அவ்வாறு வந்ததும் அடுப்பை அணைத்து, அதன் மேல் பொடி செய்த கருவேப்பிலையை தூவி இறக்கி விடவும்...

சுவையான மணமணக்கும் வத்த குழம்பு தயார்....!