கடல் - இது விமர்சனம் அல்ல!

2 Feb 2013

கடல் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுகிறார்கள். எல்லாருடைய ரசனைகளும் ஒன்றாக இருக்க முடியாதல்லவா? இதோ, என் பார்வையில்......கடல்!

நான் கல்லூரியில் படிக்கும் போது தமிழ் பாட வகுப்பை நடத்தியவர்களில் "சதீஷ்" என்னும் ஆசிரியர் எங்களுக்கு பிடித்தமானவர். காரணம், புத்தக பாடம் மட்டும் நடத்தாமல் நிகழ்கால சமூகத்தைப் பற்றியும் பாடம் நடத்தியவர்.

தமிழ் பாடத்திற்கான செமினாருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு கொடுத்து செமினார் எடுக்க சொன்ன போது எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு "அணுமின் நிலையத்தால் ஏற்படும் விளைவுகள்". அப்போது இணையம் அவ்வளவாக பரீச்சயம் இல்லாததால் சுமாராக தான் செமினார் எடுத்தேன்.

இன்னொரு செமினாரின் போது என்னை "கடல்" என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார். அப்போது நான் எழுதிய கவிதை இணையத்தில் முதல் முறையாக உங்களுக்காக!

அலைகள் தாளம் போட
படகுகள் நாட்டியம் ஆட
மேகங்கள் ஒன்று கூட
மக்கள் ஆரவாரமாக
இதோ நடக்கிறது,
கடலின் கச்சேரி!

இன்னும்சில வரிகள் எழுதினேன், சரியாக நினைவில்லை. கவிதை மொக்கையாக இருந்தாலும் இதற்கு ஆசிரியர் முழு மதிப்பெண்கள் கொடுத்தார்.

இதெல்லாம் ஒரு பதிவா என்று என்னை அடிக்க வருவதற்கு பதில் கீழுள்ள வீடியோவில் கடலைக் கண்டு ரசியுங்கள்.



ஒருவேளை நீங்கள் வேறு கடல் பற்றிய எதிர்பார்ப்புடன் வந்திருந்தால்  மீண்டும் தலைப்பை படியுங்கள்,

கடல் - இது விமர்சனம் அல்ல!

5 comments:

Prabu Krishna said...

செமினார் /// தமிழா ???? ;-)

கடல் கவிதை படித்தவுடன், அப்படியே.......

சரி வேணாம் விடுங்க :P

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நினைவலைகள்! கவிதை மொக்கைன்னு நீங்களே சொல்லிகிட்டா எப்படி? ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க!

Admin said...

செமினார் என்பது ஆங்கிலம். ஆனால் தமிழில் செமினார் எடுக்க சொன்னார்!

:) :) :)

Admin said...

நன்றி நண்பரே!

(நீங்க பொய் சொல்லலைல?

perumal karur said...

ஒரு சின்ன பதிவை கூட சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்களே !!