பதிவர் சந்திப்பு 2013 - 1

5 Sept 2013

யாருப்பா அது பைக்கை இங்கே நிறுத்தியது?
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடந்தது. அதில் நானும் கலந்துக் கொண்டேன். அதில் எடுத்த சில புகைப்படங்களும், என் நினைவுகளும் இங்கே பகிர்கிறேன்.

இந்த வருடம் பதிவர் திருவிழா நடக்கும் தினத்தில் நான் ஊரில் இருப்பேன் என்று தெரிந்தாலும், சில கசப்பான நிகழ்வுகளால் அதில் கலந்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்தேன். இருந்தாலும் அந்த கசப்புணர்வுகளை கொஞ்சம் தள்ளி வைத்து ஒருவரை சந்திப்பதற்காகவே நான் பதிவர் சந்திப்பிற்கு சென்றேன்.

உடன்பிறவா சகோதரனுடன் நான்!

அவர் வேறு யாருமில்லை, சக தொழில்நுட்ப பதிவரும், என் உடன்பிறவா சகோதரனுமான "கற்போம்" பிரபுகிருஷ்ணா. இவர் வரவில்லை என்றால் நான் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டிருப்பேனா? என்பது சந்தேகமே!

விழா நடந்த அன்று அதிகாலையே சென்னை சென்றுவிட்டதால், விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜில் தங்கினேன். ரூமில் என் ராஜபாட்டை ராஜா சாரும் கொஞ்சம் மெலிந்துவிட்ட பிரபுவும்(???) இருந்தார்கள். பிரபு தூக்க கலக்கத்தில் இருந்ததால் குட் மார்னிங் சொல்லிவிட்டு தூங்கிவிட்டோம்.

திடீர் என்று என் மொபைலில் பிரபுவின் நம்பரிலிருந்து கால் வந்தது. எழுந்து பார்த்தால் பிரபு தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் கைப்பட்டு கால் போயிருக்கும் என்று நினைத்து தூங்கினேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் வந்தது. அவருடைய பணம் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக காலை அட்டென்ட் செய்யாமல் அவரையும் என் மொபைலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு தூங்கிவிட்டேன்.

காலையில் ரூமிற்கு வந்த மதுமதி அண்ணன் பிரபு என்னை தேடுவதாக சொன்னார். அப்போது தான் தெரிந்தது, என் ரூமில் இருந்தது இரவின் புன்னகை வெற்றிவேல் என்பதும், பிரபு பக்கத்து ரூமில் இருக்கின்றார் என்பதும்.

பிரபு, நான், மெலிந்த பிரபு
என்னை ஏமாற்றியதற்காக அன்று முழுவதும் மொக்கை போட்டே வெற்றிவேல் நண்பரை பாடாய்படுத்திவிட்டேன்.

பிரபுவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். தினமும் சாட்டில் அதிகம் பேசிக்கொண்டிருந்தாலும் நேரில் பேசும்போது வார்த்தைகளைவிட புன்னகையே எங்கள் இருவரிடமும் மிகுதியாய் வெளிப்பட்டது.

சிறிது நேரம் கழித்து தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் வந்தார்கள். பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொரு ரூமில் இருந்த தம்பி அண்ணன் சதீஷ் செல்லத்துரை அவர்களை "நான் என்று சொல்லாமல்" அழைத்துவர வெற்றிவேலை அனுப்பினோம். பொய் சொல்ல தெரியாத அந்த பச்சபுள்ள நான் வந்திருக்கிறேன் என்று சொல்லியே அண்ணனை அழைத்து வந்தார். பார்ப்பதற்கு விஷால் போன்றே இருந்தார். தான் திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பதை குறியீடாக காட்டுவதற்காக எல்லாருக்கும் அல்வா கொடுத்தார்.

என் ராஜபாட்டை ராஜா, தம்பி சதீஷ் செல்லத்துரை, தமிழ்வாசி பிரகாஷ், இரவின் புன்னகை வெற்றிவேல், பிலாசபி பிரபாகரன், கற்போம் பிரபு, 
சிறிது நேரம் கழித்து விழா நடக்கும் இடத்திற்கு சென்றோம். முதலில் ஒரு பிரபல பதிவரை சந்தித்தேன். அவர் யார்? என்பதை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

டிஸ்கி:
ஒரே பதிவில் அனைத்தையும் சொல்லிவிடவேண்டும் என்று எழுத தொடங்கினேன்.ஆனால் அளவு நீளமாகிவிட்டதால் சில அல்லது பல பாகங்களாக இந்த நினைவுகள் வெளிவரும். இது வழமையான பதிவர் சந்திப்பு பதிவு(கள்) இல்லை, எழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள் மட்டுமே!

14 comments:

Prabu Krishna said...

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தவன் நான் தான். அதிலும் விடியற்காலை வருவதாக சொல்லி இன்னும் வரவில்லையே, போனை வேறு எடுக்கவில்லை என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்போதான் மதுமதி அண்ணாவிடம் இவர் வருகிறேன் என்று சொல்லி இருந்தார் இன்னும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். :-)

பதிவு எழுத எழுத நானும் கமெண்டுகிறேன் :-)

aavee said...

தொடரட்டும்..தொடரட்டும்.. நீ முன்னாலே போனா நாங்க பின்னாலே வாரோம்!!

Yaathoramani.blogspot.com said...

உங்கள் கோணத்தில் சந்திப்பு குறித்து
அறிய ஆவலாக உள்ளேன்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Unknown said...

சுருக்கம் என்றாலும் சுவையாக அழகு நடை!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சந்தோசம் உங்களை சந்தித்ததில்... இனிய நினைவுகளை ரசிக்க ஆவலுடன் உள்ளேன்... தொடருங்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாசித்... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....

Unknown said...

தொடர்கிறேன்

ஸாதிகா said...

சில அல்லது பல பாகங்களாக இந்த நினைவுகள் வெளிவரும். //தொடருங்கள்.படிக்க காத்திருக்கிறோம்.

”தளிர் சுரேஷ்” said...

எதிர்பாராமல் உங்களை சந்தித்தேன்! மகிழ்ந்தேன்!

Karthik Somalinga said...

என்னால்தான் வர முடியவில்லை! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (நான் எனக்குச் சொன்னேன்!) :)

சிராஜ் said...

// தொடருங்கள்.படிக்க காத்திருக்கிறோம்.//

ஏன்கா?? வேற வேலை எதுவும் இல்லையா??? :)

தம்பி பாசித்...

அடுத்த பார்ட்டோட முடிச்சிடனும்.. இதை வச்சே ஒரு வாரம் இழுக்கக்கூடாது....

ஸாதிகா said...

ஏன்கா?? வேற வேலை எதுவும் இல்லையா??? :)//சிராஜுதம்பி வேலை வெட்டி எல்லாம் தலைக்கு மேலே இருக்கு.இருந்தாலும் முகப்புத்தகத்திலும்,வலைப்பூவிலும் வளைய வருவதும் எனக்கு ஒரு வேலைதான் ஹி ஹி..

//அடுத்த பார்ட்டோட முடிச்சிடனும்.. இதை வச்சே ஒரு வாரம் இழுக்கக்கூடாது....// இதை வன்மையா கண்டிக்கறேன்.ஒரு அரை டஜன் பதிவாவது போடுங்க பாசித்.படிக்கறதுக்கு நாங்கள்ளாம் இருக்கோம்ல.

rajamelaiyur said...

தங்களை சந்திததில் மிக்க மகிழச்சி நண்பா

உங்களுள் ஒருவன் said...

தங்களை சந்திததில் மிக்க மகிழச்சி நண்பா... உங்கள் புன்முறுவல் தான் உங்கள் அழகே...